Wednesday, December 18, 2019

ரிஷபம் - புத்தாண்டு பலன் - 2020


ரிஷபம் - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும் சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! இந்த ஆண்டில் உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமும் தர்மகர்மாதிபதியான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார ரீதியாக மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.  வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சக நண்பர்களின் செயல்கள் மன கவலையை தரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
இந்தாண்டில் ஆண்டு கோளான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை குறைத்து கொள்ளலாம். பண வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது.
சர்ப்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும் அமைப்பு, தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் விலகி கைகூடும் யோகம், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பண விஷயத்தில் சற்று சிக்கனமாகவும் ஆரோக்கியத்தில் கவனமுடனும் இருந்தால் ஏற்றங்களை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை திறன்பட செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். நெருங்கியவர்களிடம் ஏற்படக் கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது. சிலருக்கு வயிறு பாதிப்புகள், ஆலர்ஜி பிரச்சினையால் வீண் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை 
இந்த ஆண்டில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி பாக்கிய ஸ்தானத்தில் திருக்கணிதப்படி 24-01-2020 முதல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஒரளவுக்கு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஏப்ரல், மே மாதங்களில் சுப காரியங்களுக்கான முயற்சிகளை செய்தால் எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது பொறுப்புகளை முடிந்த வரை குறைத்து கொள்வது நல்லது. உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுப்புடன் பதில் அளிப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் இந்த ஆண்டில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். புதிய முயற்சிகளில் கவனத்துடன் இருந்தால் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து செல்வது மூலம் பிரச்சினைகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்கள் இந்த ஆண்டில் எதிலும் நிதானத்தை கடைபிடித்தால் லாபகரமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கல் சுமாராக இருக்கும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தாமத நிலை, பொருளாதார ரீதியாக ஏற்ற தாழ்வுகள் உண்டாகும். பணவரவுகள் ஒரளவுக்கு இருந்து நல்ல நிலையை அடைவீர்கள். மான்புமிகு பதவிகள் உங்களை தேடி வரும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். வர வேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்க சிறிது இடையூறு உண்டாகும். சக கலைஞர்கள் உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை உண்டாக்குவார்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டி பொறாமைகளால் மன அமைதி குறையும் சூழ்நிலை உண்டாகும். நடனம், இசை போன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் சிறிது தடைக்கு பின்பு அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. அரசு அதிகாரிகளால் தேவைற்ற இடையூறு ஏற்படும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நெருங்கியவர்களே இடையூறுகளை உண்டாக்குவார்கள். புத்திரர்கள் வழியில் தேவையில்லாத மன கவலை உண்டாகும். பணி புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும் என்றாலும் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது உத்தமம்.  அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டி செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
 
மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியை பெற முடியும். கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 21-01-2020 இரவு 11.43 மணி முதல் 24-01-2020 காலை 07.39 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 2-ஆம் தேதி முதல் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். தொழில் உத்தியோக ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். -துர்கையம்மனை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் - 18-02-2020 அதிகாலை 05.13 மணி முதல் 20-02-2020 பகல் 01.52 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். செவ்வாய், கேது 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை ஏற்படும். முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 16-03-2020 பகல் 11.12 மணி முதல் 18-03-2020 இரவு 07.25 மணி வரை.
ஏப்ரல்.
ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை உண்டாக்கும் அமைப்பாகும். நினைத்தது நிறைவேறும். குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன், பொருள் சேரும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 12-04-2020 இரவு 07.12 மணி முதல் 15-04-2020 அதிகாலை 01.57 மணி வரை.
மே.
இம்மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்கள் இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். குரு அதிசாரமாக 9-ல் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களது நெருக்கடிகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. விநாயகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 10-05-2020 அதிகாலை 05.03 மணி முதல் 12-05-2020 காலை 10.16 மணி வரை.
ஜுன்.
புதன் 2-ல், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக உயர்வுகள் உண்டாகும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 06-06-2020 பகல் 03.12 மணி முதல் 08-06-2020 இரவு 07.45 மணி வரை.
ஜுலை.
லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சுக்கிரன், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 03-07-2020 பின்இரவு 12.10 மணி முதல் 06-07-2020 அதிகாலை 05.00 மணி வரை மற்றும் 31-07-2020 காலை 07.05 மணி முதல் 02-08-2020 பகல் 12.55 மணி வரை.
ஆகஸ்ட்.
இம்மாத முற்பாதியில் 3-ல் சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் நிம்மதி குறைவு ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார உயர்வுகளை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மகாலட்சுமி தேவியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 27-08-2020 பகல் 12.38 மணி முதல் 29-08-2020 இரவு 07.13 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 23-09-2020 மாலை 06.25 மணி முதல் 26-09-2020 அதிகாலை 00.40 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான பலன்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் எளிதில் கை கூடும். கடன்கள் குறைந்து வீடு, மனை வாங்க கூடிய யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் உத்தியோக ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 21-10-2020 அதிகாலை 02.13 மணி முதல் 23-10-2020 காலை 07.00 மணி வரை.
நவம்பர்.
சூரியன் 6-லும், செவ்வாய் 11-லும் சஞ்சரிப்பதால் மறைமுக பிரச்சினைகள் குறைந்து எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் உத்தியோகம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள், எதிர்ப்புகள் விலகி வலமான பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.  கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். மகாலட்சுமி தேவியையும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 17-11-2020 பகல் 12.20 மணி முதல் 19-11-2020 பகல் 03.30 மணி வரை.
டிசம்பர்.
குரு 9-லும் செவ்வாய் 11-லும் சஞ்சரிப்பது தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்களையும், பொருளாதார ரீதியாக உயர்வுகளையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற் கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 14-12-2020 இரவு 11.25 மணி முதல் 17-12-2020 அதிகாலை 01.48 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8            நிறம் - வெண்மை, நீலம்,   கிழமை - வெள்ளி, சனி
கல் -  வைரம்   திசை - தென்கிழக்கு,        தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி


No comments: