Saturday, December 21, 2019

கும்பம் - புத்தாண்டு பலன் - 2020


கும்பம் - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே! நவகிரகங்களில் ஆயுள் ஆரோக்கியத்திற்கு காரகனான சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையாக பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தி ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த விதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் நிலவிய போட்டிகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டு வந்த வாய்ப்புகள் தற்போது கிடைத்து நல்ல நிலை அடைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
உங்கள் ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சிலருக்கு குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி ராசியாதிபதி என்பதால் ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்களுக்கு அதிக கெடுதிகளை செய்ய மாட்டார். சர்ப்ப கிரகமான ராகு பஞ்சம ஸ்தானமான 5-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையான பலன்களே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்களில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும் என்றாலும் கையில் இருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும்.  பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
பெண்கள்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
மாணவ மாணவியர்
மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.

மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசிக்கு குரு, சனி, கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம் - 15-01-2020 காலை 11.28 மணி முதல் 17-01-2020 பகல் 01.49 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.
மார்ச்.
லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 10-03-2020 காலை 06.22 மணி முதல் 12-03-2020 காலை 05.35 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமானப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 06-04-2020 மாலை 05.32 மணி முதல் 08-04-2020 மாலை 04.33 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 11-ல் கேது, மாத முற்பாதியில் 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முருக வழிபாட்டையும் துர்கை வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை மற்றும் 31-05-2020 காலை 10.20 மணி முதல் 02-06-2020 பகல் 12.00 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 27-06-2020 மாலை 03.50 மணி முதல் 29-06-2020 மாலை 06.25 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், கேது 11-ல், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களையும் தவிர்த்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. முருக பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 24-07-2020 இரவு 09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள பாதிப்புகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். முருகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 21-08-2020 அதிகாலை 05.15 மணி முதல் 23-08-2020 காலை 06.05 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தொழில் பொருளாதார நிலை லாபகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், சிறு சிறு மருத்துவ செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெறலாம். சிவ பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 17-09-2020 பகல் 03.08 மணி முதல் 19-09-2020 பகல் 02.40 மணி வரை.
அக்டோபர்.
பாக்கிய ஸ்தானமான 9-ல் புதனும் லாப ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 15-10-2020 அதிகாலை 02.03 மணி முதல் 17-10-2020 அதிகாலை 01.25 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 11-11-2020 பகல் 12.00 மணி முதல் 13-11-2020 பகல் 12.30 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். துர்க்கையம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 08-12-2020 இரவு 07.30 மணி முதல் 10-12-2020 இரவு 09.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி         திசை - மேற்கு
கல் - நீலக்கல்  நிறம் - வெள்ளை, நீலம்          தெய்வம் - ஐயப்பன்No comments: