Wednesday, December 18, 2019

கடகம் - புத்தாண்டு பலன் - 2020


கடகம் - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
விடா முயற்சியுடன் செயல்படும் திறனும் உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! சந்திரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருக்க வேண்டிய ஆண்டாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அதிக அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சர்ப்ப கிரகமான கேது பகவான் ருணரோக  ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எல்லா வகையிலும் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். உறவினர்களின் உதவிகளால் எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும்.
திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சனி சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது மூலம் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குரு பார்வை 2, 10, 12-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் போட்டி பொறாமைகள் நிலவினாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் அமைப்பு, பயணங்களால் மேன்மை அடையும் யோகம் உண்டாகும். நல்ல பதவி, மதிப்பு மரியாதை இருக்கும் என்றாலும் வர வேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக வரும். உழைப்பிற்கான ஊதியம் மற்றும் சன்மானம் கிடைக்க சிறுசிறு தடைகள் ஏற்படும்.     
உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதனை தொடர்ந்து வக்ர கதியில் 12-09-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் 7-ல் (மகர ராசியில்) சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும் இக்காலத்தில் தாராள தன வரவு ஏற்பட்டு சகலவிதத்திலும் மேன்மை, கடன்கள் குறையும் அமைப்பு, குடும்பத்தில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகான முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றி, பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பதால் மன அமைதி ஏற்படும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அதன் மூலம் உங்கள் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும் என்பதால் சிந்தித்து செயல்பட்டால் நன்மை கிடைக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடைகள் இருந்தாலும் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.
உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தொழில் வியாபாரம்
உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும்.
அரசியல்
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டி இருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
கலைஞர்கள்
எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலையும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் வளமான பலனை பெற முடியும். தூர பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாது இருப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் எதிலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது.
மாணவ- மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.

மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், சனி 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்து விட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.
சந்திராஷ்டமம் - 23-02-2020 அதிகாலை 00.29 மணி முதல் 25-02-2020 பகல் 12.27 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார ரீதியாக ஏற்றம், புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்பு, நவீனகரமான பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து  ரீதியாக உள்ள சிக்கல் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 21-03-2020 காலை 06.20 மணி முதல் 23-03-2020 மாலை 06.37 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 17-04-2020 பகல் 12.17 மணி முதல் 20-04-2020 அதிகாலை 00.37 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதும் சூரியன், புதன் இம்மாதத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 14-05-2020 இரவு 07.20 மணி முதல் 17-05-2020 காலை 07.15 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நற்பலன்களை அடைய முடியும் என்றாலும் மாத முற்பாதியில் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோக ரீதியாக உயர்வுகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் சுப முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சரளமான நிலையிருக்கும். அசையா சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 11-06-2020 அதிகாலை 03.40 மணி முதல் 13-06-2020 பகல் 02.45 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 08-07-2020 பகல் 12.30 மணி முதல் 10-07-2020 இரவு 10.55 மணி வரை.
ஆகஸ்ட்.
ஜென்ம ராசியில் சூரியன், 6-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். முன்கோபத்தையும் பேச்சையும் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். 6-ல் கேது, 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் சிக்கல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும். வீண் பழிகளை சுமக்க கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 04-08-2020 இரவு 08.45 மணி முதல் 07-08-2020 காலை 06.58 மணி வரை.
செப்டம்பர்.
ஜென்ம ராசியில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். அலைச்சல், டென்ஷன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கடன்கள் படிப்படியாக குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் உண்டாக கூடிய பிரச்சினைகள் குறையும்.
சந்திராஷ்டமம் - 01-09-2020 அதிகாலை 03.49 மணி முதல் 03-09-2020 பகல் 02.15 மணி வரை மற்றும் 28-09-2020 காலை 09.40 மணி முதல் 30-09-2020 இரவு 08.35 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 9, 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பணவரவுகளால் பிரச்சினைகள் குறையும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிக்கும். முருகனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 25-10-2020 மாலை 03.25 மணி முதல் 28-10-2020 அதிகாலை 02.30 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் உத்தியோக ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களால் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. மாணவர்களும் நற்பலனை அடைவார்கள். சூரியன் மாத முற்பாதியில் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்,  டென்ஷன்கள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும்.
சந்திராஷ்டமம் - 21-11-2020 இரவு 10.25 மணி முதல் 24-11-2020 காலை 08.52 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, கடந்த கால நெருக்கடிகள் விலகும் நிலை உண்டாகும். பொருளாதார நிலை மேம்படுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்குதல், புது வீடு குடிபுகும் யோகம் போன்றவை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழிலில் வியாபார ரீதியாக ஏற்றமிகுப் பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 19-12-2020 காலை 07.15 மணி முதல் 21-12-2020 மாலை 04.30 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9     நிறம் - வெள்ளை, சிவப்பு   கிழமை - திங்கள், வியாழன்
கல் -  முத்து          திசை - வடகிழக்கு        தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: