Thursday, January 23, 2020

Today rasi palan - 24.01.2020


Today rasi palan - 24.01.2020
இன்றைய ராசிப்பலன் -  24.01.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. தை அமாவாசை. திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 




ராகு
சுக்கி
திருக்கணித கிரக நிலை
24.01.2020

  புதன் சூரிய

சனி குரு கேது சந்தி
செவ்
 


இன்றைய ராசிப்பலன் -  24.01.2020
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது.
கடகம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு இருந்த மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

No comments: