Wednesday, April 8, 2020

துலாம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


துலாம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட்டாமல் வாழும் ஆற்றலும், தன்னுடைய சொந்த கருத்துகளைக் கூட சிந்தித்து வெளிப்படுத்தும் தன்மையும் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகனான சனிபகவான் இவ்வாண்டு முழுவதும் திருக்கணிதப்படி சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க உள்ளார். சனி 4-ல் சஞ்சரிப்பது அர்த்தாஷ்டமச் சனி என்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் உண்டாகும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதால் மற்ற ராசி நேயர்களுக்கு பொதுவாக அர்த்தாஷ்டச் சனி காலங்களில் ஏற்படுத்தும் பாதிப்பை போல உங்களுக்கு கெடுதிகளை உண்டாக்க மாட்டார். உங்கள் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் உடல் அசதி, நேரத்திற்கு உணவு உன்ன முடியாத நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும்.
பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு 3, 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. எதிர்பார்க்கும் தன வரவுகள் கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து விடும். சர்ப்ப கிரகமான கேது 3-ல் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளால் உங்களது குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்காது. மறைமுக எதிர்ப்புகள் சிலவற்றால் மன அமைதி குறையும். கூட்டாளிகளின் உதவியால் கடுமையான நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். உடல் சோர்வால் பணியில் முழு கவனம் செலுத்த இடையூறு உண்டாகும், சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும், 
திருக்கணிதப்படி சர்ப கிரகமான ராகு 8-லும், கேது 2-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் சஞ்சரிப்பதால்  நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும்.

உடல் ஆரோக்கியம்
தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலையால் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எது எப்படி இருந்தாலும் அன்றாட பணிகளையும் உங்களது கடமைகளையும் தக்க சமயத்தில் முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிள் ஆதரவு மன அமைதியை தரும்.
குடும்பம் பொருளாதாரம்
குடும்ப ஒற்றுமையானது சுமாராக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சிறுசிறு இடையூறுகளுக்கு பின்பு அனுகூலப்பலனை அடைய முடியும். வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுபிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். பணவரவுகள் ஏற்ற இருக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சில ஆதாயங்களை பெற முடியும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், பணி புரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்து போக முடியாத நிலை உண்டாகும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தக்க சமயத்தில் கிடைக்கும். உயரதிகாரிகளின்  ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் உங்களுக்கு சற்று ஒத்துழைப்பாகச் செயல்படுவதால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டின் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தேவையற்ற இடையூறு உண்டாகும்.
அரசியல்
அரசியல்வாதிகள் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதிர் நீச்சல் போட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்ய நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைத்து மன ஆறுதலை ஏற்படுத்தும். கால் நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப் போனாலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படும், இந்த ஆண்டு தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். 4-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபடுகள் தோன்றி மறையும். தேவையற்ற அலைச்சல், உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழிலில் சற்று மந்தமான நிலையிருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். சிவ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
வைகாசி 
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில், வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
ஆனி                
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் வரும் 4-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, கடந்த கால நெருக்கடிகள் விலகும் அமைப்பு உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டு. கடன் சுமைகள் சற்றே குறைவதால் குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலையாட்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
ஆடி                   
மாத கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் 3-ல் கேது, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். தொழில் உத்தியோக ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
ஆவணி
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி குவியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். தொழிலாளர்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. முருக பெருமானை வழிபடவும்.
புரட்டாசி      
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். இம்மாதத்தில் சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்லது நல்லது. எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
ஐப்பசி             
ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சோர்வு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காக செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இம்மாதத்தில் ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். சிவ பெருமானை வழிபடுவது உத்ததம்.
மார்கழி         
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், மாத தொடக்கத்தில் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுடைய செயல்களுக்கு அனுகூலங்களை தரும் அமைப்பாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கை கூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். சனி ப்ரீதியாக விநாயகரை வழிபடுவது நல்லது.
தை                    
இம்மாதத்தில் 4-ல் சூரியன், சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும்.  கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. தேவையற்ற பயணங்களை தவிரப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.
மாசி                  
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன்கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
பங்குனி
மாத கோளான சூரியன் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் புதன் 5-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக முனன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபட்டால் நற்பலன்களை பெற முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 4,5,6,7,8                                நிறம் - வெள்ளை, பச்சை                கிழமை - வெள்ளி, புதன்
கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு           தெய்வம் - லக்ஷ்மி

No comments: