Rasi palangal

Tuesday, June 30, 2020

Today rasi palan - 01.07.2020


Today rasi palan - 01.07.2020
இன்றைய ராசிப்பலன் -  01.07.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
01-07-2020, ஆனி 17, புதன்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.34 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ்

சுக்கி
சூரிய ராகு புதன் (வ)

திருக்கணித கிரக நிலை
01.07.2020

சனி (வ)

குரு(வ)கேது

  சந்தி


இன்றைய ராசிப்பலன் -  01.07.2020
மேஷம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
கன்னி
இன்று பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். சகோதர சகோதரிகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
மகரம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.
மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம்.

Monday, June 29, 2020

Today rasi palan - 30.06.2020


Today rasi palan - 30.06.2020
இன்றைய ராசிப்பலன் -  30.06.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
30-06-2020, ஆனி 16, செவ்வாய்க்கிழமை, தசமி திதி இரவு 07.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு விசாகம். சித்த யோகம் பின்இரவு 04.04 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. முருக- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்

சுக்கி
சூரிய ராகு புதன் (வ)

திருக்கணித கிரக நிலை
30.06.2020

சனி (வ)

குரு(வ)கேது

  சந்தி


இன்றைய ராசிப்பலன் -  30.06.2020
மேஷம்
இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் ரீதிமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று செய்யும் செயல்களில் தாமதப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் சோர்வுடனும், உற்சாகமின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கும்பம்
இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.
மீனம்
இன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.