Thursday, June 4, 2020

வார ராசிப்பலன் ஜுன் 7 முதல் 13 வரை 2020


வார ராசிப்பலன்
ஜுன் 7 முதல் 13 வரை 2020 
-வைகாசி 25 முதல் 31 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சூரிய சுக்கி(வ)
புதன் ராகு
செவ்
திருக்கணித கிரக நிலை


குரு(வ) சனி(வ)

சந்தி கேது

 


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு
06&06&2020 பகல் 03.12 மணி முதல் 08&06&2020 இரவு 07.45 மணி வரை.
மகரம்
08&06&2020 இரவு 07.45 மணி முதல் 11&06&2020 அதிகாலை 03.40 மணி வரை.
கும்பம்
11&06&2020 அதிகாலை 03.40 மணி முதல் 13&06&2020 பகல் 02.45 மணி வரை.
மீனம்
13&06&2020 பகல் 02.45 மணி முதல் 16&06&2020 அதிகாலை 03.18 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
07.06.2020 வைகாசி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

10.06.2020 வைகாசி 28 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

11.06.2020 வைகாசி 29 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

12.06.2020 வைகாசி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10--ல் குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்-- மனைவி பேச்சில் சற்று பொறுமையுடன் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  9, 10, 11, 12.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும்.  குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிவ வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 13.
சந்திராஷ்டமம் - 06&06&2020 பகல் 03.12 மணி முதல் 08&06&2020 இரவு 07.45 மணி வரை.


மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், சுக்கிரன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைவுகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 13.
சந்திராஷ்டமம் -   08&06&2020 இரவு 07.45 மணி முதல் 11&06&2020 அதிகாலை 03.40 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் வளமான பலன்களை தரும் அமைப்பாகும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். தாராள தனவரவு உண்டாகி தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். செவ்வாய் 8--ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மன அமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளிப் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சஷ்டியன்று முருக பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 9, 10.
சந்திராஷ்டமம் -   11&06&2020 அதிகாலை 03.40 மணி முதல் 13&06&2020 பகல் 02.45 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் புதன், ராகு சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களது செயல்களால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். செவ்வாய் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடன்பிறப்புக்கள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் -   13&06&2020 பகல் 02.45 மணி முதல் 16&06&2020 அதிகாலை 03.18 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், ராகு சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். செவ்வாய் 6-ல் இருப்பதால் உங்கள் பலம் அதிகரித்து எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்-- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகும். சனி பகவானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 13.   

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, குரு, 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் விரயங்கள் உண்டாககூடும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் கேது 3-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களின் ஆதரவுடன் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பணம் சம்பந்தமான கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 13.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது, தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. முருக பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் இருப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  9, 10.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நெருங்கியவர்களையும், உற்றார், உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயக பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 11, 12.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடைய முடியும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை படிப்படியாக குறையும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  9, 10, 13.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் வாய்ப்பும் அமையும். செவ்வாய் ஜென்ம ராசியிலும், 4-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச் செயல்பட்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குடும்பத்தினரையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். சிவ பெருமானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 11, 12.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். முருக வழிபாடு மற்றும் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  7, 8, 9, 10.




No comments: