Saturday, July 18, 2020

Today rasi palan – 19.07.2020


Today rasi palan – 19.07.2020
இன்றைய ராசிப்பலன் -  19.07.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
இன்றைய  பஞ்சாங்கம்
19-07-2020, ஆடி 04, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 12.10 வரை பின்பு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.40 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

செவ்

சுக்கி
ராகு புதன்
சந்தி

திருக்கணித கிரக நிலை
19.07.2020
சூரிய
சனி (வ)

குரு(வ) கேது

 


இன்றைய ராசிப்பலன் -  19.07.2020
மேஷம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகளில் சற்ற சிந்தித்து செயல்படுவது நல்லது. சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.
கடகம்
இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.
சிம்மம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.
துலாம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
தனுசு
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மீனம்
இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.


No comments: