வார ராசிப்பலன் - நவம்பர் 8 முதல்
14 வரை 2020
ஜப்பசி 23 முதல் 29 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,
B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
செவ்(வ) |
|
ராகு |
|
|
|
சந்தி |
|
சனி |
|
||
குரு |
கேது |
சூரிய புதன் |
சுக்கி |
கிரக மாற்றம்
14-11-2020 செவ்வாய் வக்ர நிவர்த்தி காலை 06.32 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும்
ராசிகள்
கடகம் 07-11-2020 அதிகாலை 01.49 மணி முதல் 09-11-2020
காலை 08.43 மணி வரை.
சிம்மம் 09-11-2020 காலை 08.43 மணி முதல் 11-11-2020
பகல் 12.00 மணி வரை.
கன்னி 11-11-2020 பகல் 12.00 மணி முதல் 13-11-2020
பகல் 12.30 மணி வரை.
துலாம் 13-11-2020
பகல் 12.30 மணி முதல் 15-11-2020 பகல் 11.58 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
11.11.2020 ஐப்பசி 26 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசி திதி உத்திரம்
நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம்.
தேய்பிறை
12.11.2020 ஐப்பசி 27 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசி திதி அஸ்தம்
நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம்.
தேய்பிறை
13.11.2020 ஐப்பசி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசி திதி
சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு
இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல்
புதன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து பல்வேறு வகையில்
வளர்ச்சிகளை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தடைப்பட்ட
சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே
சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சூரியன் 7-ல்,
செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது,
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக
செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து
புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும்
அனைத்தையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற
பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும்.
சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - - 11, 12, 13, 14.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி,
மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும்
ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். ராசியதிபதி சுக்கிரன் 5-ல்
சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து
பாக்கெட்டை நிரப்பும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை
தவிர்க்கலாம். பொன், பொருள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேற
கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும்
மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை
இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்
என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை
வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும்
கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம்
தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியையும்,
விநாயகரையும் வணங்கினால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - - 8, 13, 14.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம்
பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை
மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 7-ல் குரு,
10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும்
மேலோங்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான
பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள்
தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில்
உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் எதையும்
சமாளிப்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்
ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக
நடைபெறும். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர்
வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர்
விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது
நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். சனி பகவானை வழிபடுவது,
சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும்
ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 6-ல் குரு
சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால்
எதிலும் சிக்கனத்துடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும்
காரியங்களில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்
நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு
சிறப்பாக இருக்கும் என்றாலும் குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார்
உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்
பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய
முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை
தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது
நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால்
அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பிரதோஷ
காலங்களில் விரதமிருந்து சிவ பகவானை வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - - 8, 11, 12.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம்
பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட
சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 3-ல், குரு 5-ல், சனி 6-ல்
சஞ்சரிப்பதால் உங்களது கனவுகள் நிறைவேறும் இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி
பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும்
ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பொன்
பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண
முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடும், அம்பிகை வழிபாடும் செய்து வந்தால்
மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13,
14.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்,
அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம்
கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்தில்
விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
தடைக்குப் பின் அனுகூலப் பலன் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை
இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகலாம்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து
நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக
எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது
நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். குரு 4-ல் இருப்பதால் கொடுக்கல்-
வாங்கல் விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும்
பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - - 8, 11, 12.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள்,
சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம
ராசியில் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும்
எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால்
முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன்-
மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து
கொண்டால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள்
பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி
மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை
சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய
முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும்
தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில்
சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு
உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாட்டையும் சனி பகவான்
வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10,
13, 14.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்,
அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட
விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 11-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். தாராள
தனவரவுகளால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி
நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செவ்வாய் 5-ல் இருப்பதால் உடல்
ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை
செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உற்றார்
உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி
உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்
உண்டாகும். தொழில் வியாபாரம் செய்வபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும்
முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் மன நிம்மதியுடன்
பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தடை தாமதத்திற்குப் பின் கிடைக்கும்.
பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம்
இருப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11,
12.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே,
உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தாலும் 6-ல் ராகு, 11-ல் சூரியன், புதன்
சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில்
சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான
சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி
இடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே
விலகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி
உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள்
ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால்
எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக்
கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த
கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்
வகையில் இருக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் நன்மைகள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13,
14.
சந்திராஷ்டமம் - 07-11-2020 அதிகாலை 01.49 மணி முதல் 09-11-2020
காலை 08.43 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம்
பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக
வாழும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் 3-ல் செவ்வாய்,
10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள்
கிடைக்கும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உடல்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. உற்றார் உறவினர்களால் தேவையற்ற
மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதி
குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது
உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள்
பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க
முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும்.
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். அரசு வழியில்
அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி
புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் அமையும். அம்பிகை வழிபாடு செய்வது, சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 13, 14.
சந்திராஷ்டமம் - 09-11-2020 காலை 08.43 மணி முதல் 11-11-2020 பகல்
12.00 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி
1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது
நல்லது. சூரியன், புதன் 9-லும், குரு 11-லும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி வீண்
வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக
அமைந்து குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு
சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார்
உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக
அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை
அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து
கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக்
கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்
பெற்று கடன் சுமைகள் சற்று குறையும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள்
அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். ராகு
காலங்களில் துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.
சந்திராஷ்டமம் 11-11-2020
பகல் 12.00 மணி முதல் 13-11-2020 பகல் 12.30 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத
தனசேர்க்கைகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள
எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல
வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள்
தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
சாதகப்பலன் கிடைக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு
ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது பெரிய
தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த
இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற
முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபங்கள் கிட்டும். முன் கோபத்தைக்
குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தேவையற்ற
பயணங்களை தவிர்ப்பது உத்தமம். முருக வழிபாடும் சிவ வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் - 13-11-2020
பகல் 12.30 மணி முதல் 15-11-2020 பகல் 11.58 மணி வரை.
No comments:
Post a Comment