Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - கடகம்

 

புத்தாண்டு பலன் & 2021 - கடகம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

கடகம்  புனர்பூசம் 4&ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

விடா முயற்சியுடன் செயல்படும் திறனும், உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வரும் 2021&ஆம் ஆண்டில் சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 11&ல் வலுவாக சஞ்சரிப்பதும், ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ல் வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் நன்றாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். தொழில் ரீதியாக படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். எதிர்பார்த்த லாபத்தினை அடைந்து விட முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்& வாங்கல் சரளமான நிலையிருக்கும்.  உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும் என்பதால் பணியில் கவனமுடன் நடந்து கொள்வது, உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. பூர்வீக சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப் பலன்களை பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கு இவ்வாண்டு முழுவதும் சனி பகவான் சமசப்தம ஸ்தனமான 7&ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கேது இந்த வருடம் 5&ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சில நேரங்களில் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். 

குரு பகவான் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. இக்காலத்தில் கொடுக்கல்& வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறுசி-று பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும், அஜீரண கோளாறுகள் உண்டாவதை தவிர்க்க உதவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிது மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்& மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும் என்றாலும் பங்காளியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்& வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றியும் ஓரளவுக்கு லாபமும் உண்டாகும். கொடுக்கல்& வாங்கல் சுமாரான நிலையில் இருக்கும். இதுவரை இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக உங்களுக்கு அமையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலமும் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

உத்தியோகம்

இந்த ஆண்டு உங்களுக்கு பல்வேறு வகையில் வலமான பலன்களை தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தக்க நேரத்தில் கிடைக்கும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது, உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்

கணவன்& மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும் என்பதால் அவர்களின் ஆதரவினைப் பெறுவீர்கள். பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலம் ஆகும். மேடை பேச்சுகளில் சற்று கவனமுடன் பேசுவது நல்லது. சில நேரங்களில் கட்சி பணிக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையும் அதனால் வீண் விரயங்களும் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. புதிய யுக்திகளை கையாண்டு உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

கலைஞர்கள்

தேவையற்ற எதிர்ப்புகள் மறைவதால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர்களுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்ல நேரிடும். வரவேண்டிய பணத்தொகைகள் கைக்கு கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

மாணவ& மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டாலும் பெற்றோர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய நண்பர்களின் நட்பால் சாதக பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 1,2,3,9      நிறம் & வெள்ளை, சிவப்பு    கிழமை & திங்கள், வியாழன்

கல் &  முத்து          திசை & வடகிழக்கு     தெய்வம் & வெங்கடாசலபதி

No comments: