Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022

 பிலவ வருட பலன்கள் 2021-2022

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

அழகிய உடல்வாகும், நீலவிழியும் சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் கிடைக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால அலைச்சல்கள் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

     ஆண்டு கோளான குரு பகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் சிக்கனத்துடன் செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிலும் முன் நின்று செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள், நெருங்கியவர்களே சில இடையூறுகளை ஏற்படுத்தும் சூழ்நிலை இருப்பதால் மற்றர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இவ்வாண்டில் குரு 6-ல் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் சகலவிதத்திலும் மேன்மைகள் ஏற்படும் யோகம் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி கை கூடும் வாய்ப்பு ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். நீங்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். தொழிலில் மந்த நிலை ஏற்படும். பயணங்கள் மூலம் செலவுகள் ஏற்படும் என்றாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

கலைஞர்கள்

தேவையற்ற பிரச்சினைகளால் பெயர், புகழ் மங்க கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் நல்ல வாய்ப்புகளை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். பொருளாதாரநிலை சிறப்படையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகி உடல் நலம் பாதிப்படையும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

படிப்பு

கல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சிவ வழிபாடு செய்யவும்.

வைகாசி

உங்கள் ராசிக்கு 9,10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது. அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ஆனி

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தட்சிணாமூர்த்தி வழிபடுவது நல்லது.       

ஆடி

உங்கள் ராசியதிபதி புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் பல்வேறு வகையில் வளமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை உயரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொ¬கைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். அம்மனை வழிபடுவது நல்லது.

ஆவணி

உங்கள் ராசிக்கு விரய ஸ்தாமான 12-ல் சூரியன், செவ்வாய், 6-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களில் சாதகப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் தேவையற்ற விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவனையும் முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.    

ஐப்பசி    

ஜென்ம ராசியில் புதன், 3-ல் கேது, 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனை பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும். முருகரையும், விஷ்ணுவையும் வழிபடுவது நல்லது.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு மேன்மைகளை அடையும் வாய்ப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களது அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சனிப்பீரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

மார்கழி

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதாலும் 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கடன்களும் கு¬யும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். சிவனை வழிபடவும்.    

தை

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது, பிறர் விஷயங்களில் தலையிடு செய்யாது இருப்பதும் நல்லது. செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

மாசி

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருந்தால் வளமான பலன்களை பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.    

பங்குனி

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்களால் நிம்மதி குறைவுகள் உண்டாகும் என்பதால் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சில நேரங்களில் போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளுக்குப் பின் சரியாகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.

முருகப் பெருமானை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8          நிறம் - பச்சை, நீலம் கிழமை - புதன், சனி

கல் -  மரகத பச்சை திசை - வடக்கு       தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: