Rasi palangal

Friday, May 7, 2021

Election Prediction |சொன்னது பலித்தது | தேர்தல் 2021| Astrology | News 7...

ஒம் சரவணபவா

 

 

உயர்திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார். கடந்த 01.09.2020 அன்று நியூஸ் 7 தொலைக்காட்சியில் ராகு- கேது பெயர்ச்சி பலன்களை பற்றி பேசுகின்ற பொழுது 2021 தேர்தலில் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு சிறப்பான நிலையினை அடையும் யோகம் உண்டு என கருத்து கூறினேன். அதுபோல கடந்த 31. 12. 2020 அன்று ஆதன் தமிழ் யூ டியூப் தொலைக்காட்சியில் வரும் சட்டசபை தேர்தலில் திரு மு.க. ஸ்டாலின் அய்யா அவர்கள் ஒரு நல்ல நிலையினை அடைவார் என கூறியிருந்தேன். ஜோதிடம் என்பது ஒரு மிகச்சிறந்த கலையாகும் இதை கணிக்கக் கூடிய ஜோதிடர்கள் செய்யக்கூடிய தவறால் மக்களிடம் ஒரு தவறான எண்ணம் உருவாகி விடுகிறது.

பொதுவாக உயர் பதவியை அடைவதற்கு இந்த அமைப்பு இருந்தால் தான் பதவி யோகம் உண்டு என்பதில்லை. ஜாதகப்படி நல்ல நேரம் வரும் போது பதவியும் புகழும் தேடி வரும். சிலர் வேண்டுமென்றே தலைவருக்கு பதவி அடையும் யோகம் இல்லை என பிரச்சாரமாகவே செய்தார்கள். அந்த காலத்தில் நான் உறுதியாக அவர் ஒரு நல்ல நிலையை அடைவார் என பலரிடம் கூறி வந்தேன்.

ஒரு சில ஜோதிடர்கள் கூறிய கருத்தே ஜோதிட சமுதாயமே கூறிய கருத்தாக சித்தரிக்கப்பட்டது. ஒரு சிலர் கணிக்கின்ற கணிதத்தில் செய்யும் தவறால் ஏற்பட்ட நிலைக்கு இது காரணமே தவிர ஜோதிடம் என்பது ஒரு சிறந்த கலையாகும்.

 

 நன்றி முருகுபாலமுருகன்

 

No comments: