புத்தாண்டு பலன் - 2022 - ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம்
1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும்,
அசட்டு தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியும்
தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடத்தில் 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது
அற்புதமான அமைப்பு என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு ஏற்றங்களை பெறுவீர்கள். ஆண்டில்
தொடக்கத்தில் ஆண்டு கோளான குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் ஜென்ம ராசியில்
ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் முதல் மூன்று மாதம் மட்டும்
பண விஷயத்தில் சற்று கவனத்துடன் நீங்கள் செயல்படுவது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து
செல்வது நல்லது.
பொன்னவன்
என போற்றப்படும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான
11-ல் சஞ்சரிப்பதும், வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது
உங்கள் ராசிக்கு 6-லும், ராகு 12-லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்கள் வாழ்வில் மிக
பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்
பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள்
அனைத்திலும் வெற்றியினைப் பெற முடியும். தடைபட்டு கொண்டிருந்த திருமண சுப முயற்சிகளில்
தடை விலகி நல்லது நடக்கும். சிறப்பான வரன்கள் தேடி வருவதால் நல்ல வாழ்க்கை அமையும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே நீண்ட நாட்களாக இருந்த
கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று
சேறும்.
நவீன பொருட்களையும், அசையும், அசையா சொத்துக்கள்
வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர
வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண
முடியும். கடன் பிரச்சினைகளால் அவதிபடுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன்
லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது மூலம் அபிவிருத்தியை
பெருக்கி கொள்ள முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நற்பலன்களை தரும் என்றாலும்
தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய
இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும். உடன் பணிபுரிவர்களிடம் விட்டு கொடுத்து
சென்றால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய
விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற
வேலை வாய்ப்பு அமையும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த
கால பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில்
சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து
கொண்டு இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை நீடிப்பதால் மன நிம்மதி ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள்
ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு
உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சொந்த பூமி
மனை வாங்கக் கூடிய யோகங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்-
வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி
அனுகூலப்பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இழுபறி
நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி வெற்றிக் கிட்டும். பல பெரிய மனிதர்களின்
நட்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை தக்க நேரத்தில் காப்பாற்றி
நற்பெயர் எடுப்பீர்கள்.
தொழில் வியாபாரிகளுக்கு
நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடுவீர்கள். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள்.
புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத்
தொடர்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகளை
சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து எதிர்பார்க்கும்
ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிகளுக்கு தகுந்த
பாராட்டுதல்களும் உயரதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிவீர்கள்.
உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர்
வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு
உங்களது பெயர் புகழ் உயரும். சமுதாயத்தில்
நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள்
தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் பயணங்களை
மேற்கொள்ள நேரிடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக செலவு செய்வதில்
தொய்வு ஏற்படாது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும்.
அரசு வழியில் பல மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்றப் பலன்களை அடைவதால் மனநிம்மதி
உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால்
புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை
வாங்கும் யோகம் ஏற்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபத்தினை அடைவீர்கள்.
பெண்களுக்கு
உடல் நிலை சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில்
சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள்
விலகி ஒற்றுமை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள்
சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளை தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
படிப்பு
மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப்
பெற்று தேர்ச்சியடைய முடியும். உடல் ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக
செயல்படுவீர்கள். நவீன விஷயங்களை கற்று கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கல்விக்காக பயணங்களை
மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளியூர் மூலம் அனுகூலம் கிட்டும். பெற்றோர்
ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய், மாத முற்பாதியில்
சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்
என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற
வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து
செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும்.
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய
முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.
சிவ வழிபாடு முருக வழிபாடு செய்யவும்-.
சந்திராஷ்டமம் - 01-01-2022 இரவு 07.17 மணி முதல் 03-01-2022
மாலை 06.52 மணி வரை மற்றும் 29-01-2022 அதிகாலை 05.07 மணி முதல் 31-01-2022 அதிகாலை
05.46 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், சுக்கிரன்,
10-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் தான் பிரச்சினைகளை
எதிர்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை
பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை
காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்
செலுத்துவது நற்பலனை தரும். முருகரை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 25-02-2022 பகல் 12.07 மணி முதல் 27-02-2022
பகல் 02.22 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன்,
10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும்
முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு
கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு
பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும்
பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில்
நிம்மதியான நிலை இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 24-03-2022 மாலை 05.29 மணி முதல் 26-03-2022
இரவு 08.28 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-லும், மாத
முற்பாதியில் சூரியன் 11-லும் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில்
உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வரும் 14-ஆம் தேதி முதல்
குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள்
கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக
கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க
நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெறும்.
பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணி
புரிய முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 20-04-2022 இரவு 11.40 மணி முதல் 23-04-2022
அதிகாலை 01.52 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், 11-ல்
குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில்
இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க
வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட
முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால்
அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப்பலனை அடைவீர்கள். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம் - 18-05-2022 காலை 08.09 மணி முதல் 20-05-2022
காலை 08.45 மணி வரை.
ஜுன்.
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை
குறைத்துக் கொண்டு நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது
உத்தமம். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும்
அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை
குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபார
ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும்
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம் - 14-06-2022 மாலை 06.32 மணி முதல் 16-06-2022
மாலை 05.55 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, மாத பிற்பாதியில்
சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில்
மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு
சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம்
சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும்.
விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 12-07-2022 அதிகாலை 05.15 மணி முதல் 14-07-2022
அதிகாலை 04.32 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, இம்மாத முற்பாதியில்
சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக
இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து
வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார்
உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்
பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும்
எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற
பயணங்களை தவிர்த்தால் அலைச்ச¬ல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கால பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 08-08-2022 பகல் 02.37 மணி முதல் 10-08-2022
பகல் 02.58 மணி வரை.
செப்டம்பர்.
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால்
பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
நல்லது. எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள்
சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப்
பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக
செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் நிதானித்துச் செயல்படுவது
நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 04-09-2022 இரவு 09.42 மணி முதல் 06-09-2022
இரவு 11.37 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, மாத பிற்பாதியில்
6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண
வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும்
நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை
அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது
நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும்.
கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தெய்வ தரிசனங்களுக்காக
பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது.
ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 02-10-2022 அதிகாலை 03.10 மணி முதல் 04-10-2022
காலை 06.01 மணி வரை மற்றும் 29-10-2022 காலை 09.05 மணி முதல் 31-10-2022 பகல் 11.23
மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், கேது, 11-ல்
குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் எடுக்கும்
எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள்
இருப்பதால் சேமிக்க முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில்
எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 25-11-2022 மாலை 05.20 மணி முதல் 27-11-2022
மாலை 06.05 மணி வரை.
டிசம்பர்.
ஜென்ம ராசியில் செவ்வாய், 7,8-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார்
உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது உத்தமம். கேது 6-ல் குரு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான
பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை
அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை
பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.
சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 23-12-2022 அதிகாலை 04.02 மணி முதல் 25-12-2022
அதிகாலை 03.30 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் - வெண்மை, நீலம்,
கிழமை - வெள்ளி, சனி
கல் -
வைரம் திசை - தென்கிழக்கு,
தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி
No comments:
Post a Comment