Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - துலாம்

புத்தாண்டு பலன் - 2022 - துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே, பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நேர்மையையே குறிக்கோளாக கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வரும் வருடத்தில் 13-04-2022 வரை ஆண்டு கோளான குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வந்து சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் வளமான பலன்கள் கிடைக்கும் யோகம் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும் நிலை உண்டாகும்.

வரும் 2022-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். உங்களது சுகுவாழ்வு சொகுசு வாழ்வு சற்று பாதிக்கும்.

வரும் 13-04-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் உங்களின் தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். முடிந்த வரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வதன் மூலம் பொருட் தேக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதப்படும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது முடிந்த வரை வேலை பளுவைக் குறைத்துக் கொள்ளவது நல்லது.

இவ்வருடத்தில் உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு வரும் 12-04-2022 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7-லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். ஒன்று இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் இக்காலத்தில் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சினைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின் வசூலித்து விடுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிபடியாக நிவர்த்தியாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல் ஏற்படும். நிறைய போட்டி பொறாமைகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது  கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடை தாமங்களுக்குப் பின் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதால் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவைப் பெற அரும்பாடுபட வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் ஒரளவுக்கு அவர்களிடம் செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது உத்தமம்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் எல்லாம் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். கால்நடைகளால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். சுப காரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். தாய் வழியில் ஆதரவு கிட்டும். புத்திர பாக்கியம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சற்று அறுதலை அளிக்கும்.

படிப்பு

கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும் அயாராத உழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன், பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 12-01-2022 இரவு 08.45 மணி முதல் 15-01-2022 காலை 09.51 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 09-02-2022 அதிகாலை 04.09 மணி முதல் 11-02-2022 மாலை 05.05 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் இருந்த கவலைகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானுக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 08-03-2022 பகல் 12.30 மணி முதல் 11-03-2022 அதிகாலை 01.03 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 5-ல் குரு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் நிலவிய தேக்கங்கள் விலகி அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபமும் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் - 04-04-2022 இரவு 09.01 மணி முதல் 07-04-2022 காலை 09.09 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் சூரியன் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 02-05-2022 அதிகாலை 04.43 மணி முதல் 04-05-2022 மாலை 04.45 மணி வரை மற்றும் 29-05-2022 பகல் 11.15 மணி முதல் 31-05-2022 இரவு 11.30 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் நற்பலனை அடைய எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கடன்கள் சற்று குறையும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் வேலைபளுவை குறைத்து கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்து நல்லது.

சந்திராஷ்டமம் - 25-06-2022 மாலை 05.02 மணி முதல் 28-06-2022 அதிகாலை 05.32 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 22-07-2022 இரவு 11.01 மணி முதல் 25-07-2022 பகல் 11.32 மணி வரை.

ஆகஸ்ட்.

ராசியதிபதி சுக்கிரன் 9, 10-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 19-08-2022 காலை 06.06 மணி முதல் 21-08-2022 மாலை 06.10 மணி வரை.

செப்டம்பர்.

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சூரியன், சுக்கிரன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.  பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழிலில் வேலையாட்கள் உதவியால் நெருக்கடி குறையும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 15-09-2022 பகல் 02.28 மணி முதல் 18-09-2022 அதிகாலை 01.43 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு ஏற்படும். கணவன்- மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 12-10-2022 இரவு 11.30 மணி முதல் 15-10-2022 காலை 10.01 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசியில் சூரியன், 6-ல் குரு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.  சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 09-11-2022 காலை 07.58 மணி முதல் 11-11-2022 காலை 06.17 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 06-12-2022 பகல் 03.02 மணி முதல் 09-12-2022 அதிகாலை 01.43 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8             நிறம் - வெள்ளை, பச்சை            கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                        திசை - தென் கிழக்கு       தெய்வம் - லக்ஷ்மி

 

No comments: