Friday, March 18, 2022

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 கன்னி

 ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைவு, ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் நடந்து கொண்டால் மட்டுமே ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

                உங்கள் ராசிக்கு 4, 7 ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களது பொளாதார நிலை அற்புதமாக இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். நவீன பொருட்கள், வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமின்றி தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு உண்டு. கூட்டாளிகளின் ஆதரவால் நற்பலன்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் சரியான நேரத்திற்கு கிடைக்காத காரணத்தால் நீங்கள் நேரடியாக சில நேரங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கும்பணம் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலங்களை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி வளர்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். வெளியூர் சென்று பணிபுரிய வேண்டும் என எண்ணியவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷடத்தை தரும் அமைப்பாகும்.

                வரும் 22-04-2023 முதல் குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் வரும் 17-01-2023 முதல் சனி 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர் கொண்டு பல்வேறு வலமான பலன்களை அடைவீர்கள். சனி 6-ல் சஞ்சரிக்கும் காலம் என்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்குவது மட்டுமின்றி தொழில் வியாபாரம் லாபகரமாக இருந்து அனைத்து வகையிலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகபெரிய பதவி கிடைக்கும். உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி ஏற்படலாம் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். குரு சனி சாதக சஞ்சாரத்தால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அழகிய குழந்தை கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கி பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெற முடியும். வேலையாட்களால் சிறிது தொந்தரவு ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் லாபம் அடைய முடியும். கடன்கள் ஒரளவுக்கு குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களது சேமிப்பு அதிகரிக்கும். கொடுத்த பணத்தை வரும் நாட்களில் எளிதில் வசூல் செய்ய முடியும். உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உற்றார் உறவினர்கள் பண விஷயத்தில் சிறிது நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியும். பெயர் புகழ் கௌரவ பதவிகள் தேடி வரும். பேச்சால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எது பேசுவது என்றாலும் சிந்தித்து பேச்சினால் நற்பலனை அடைய முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தாராளமாக பலருக்கு உதவி  செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் இருந்தாலும் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். உடன் இருப்பவர்களிடமும் பங்காளிடமும் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய்கனிகளாலும், கால்நடைகளாலும் லாபத்தை அடைய முடியும்.

கலைஞர்கள்

உங்கள் உழைப்பிற்கான பலனை பெற முடியும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும்மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் அற்புதமாக இருப்பதால் நவீன பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி சொத்துகளால் நற்பலன் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் உடல் சோர்வு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் நற்பெயர் எடுக்க முடியும். உங்கள் தனி திறமைகளை வெளிகாட்டி பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் தேவை.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 8-ல், கேது குரு நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதாலும், வரும் 29-04-2022 முதல் சனி 6-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டு. எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாதுபேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்பை அடைய முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 8-ல், கேது குரு நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் நன்றாக இருந்து உங்கள் வாழக்கை தரம் உயரும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழி சொற்கள் விலகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வேலையாட்களின் உதவி குறைவாக இருப்பதால் உங்களுக்கு பணி சுமை அதிகரித்து ஒய்வு நேரம் குறையும்

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 8-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். புதிய திட்டங்களை போட்டு அதன் மூலம் பொருளாதார மேன்மைகளை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும்

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 8-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. குரு வரும் 22-04-2023 வரை 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு பஞ்சமிருக்காது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 8-ல், கேது சித்திரை நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். எதையும் எதிர் கொள்ளும் திறன் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல லாபங்களை அடைவீர்கள். உங்கள் தனி திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                   நிறம் - பச்சை, நீலம்           கிழமை - புதன், சனி

கல்மரகத பச்சை              திசை - வடக்கு                          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

 

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது

No comments: