Friday, March 18, 2022

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 கும்பம்

 ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல் டென்ஷன் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும்.  அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால வீண் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருட்தேக்கங்கள் குறைந்து லாபகரமான பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

                உங்கள் ராசியாதிபதி சனி தற்போது 12-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 17-01-2023 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குரு வரும் 22-04-2023 முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமாக நிலை இருக்கும் என்றாலும் ராகுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். மருத்துவச் செலவுகள் சற்று குறையும். வீண் செலவுகளை எதிர் கொள்ள மருத்துவ காப்பிடு எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பன் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம்

கடந்த கால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் சற்று குறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனம் தேவை.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

அரசியல்

பெயர் புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெயர் புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ மிக்க பதவிகள் தேடி வரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். கூலியாட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் நேரடியாக செயல்பட வேண்டி இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும்.

கலைஞர்கள்

திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணத் தொகைகள் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலம் ஏற்படும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி கடந்த கால சோதனைகள் மறைந்து வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கேது விசாக நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் உடம்பு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் குரு 6, 8-ஆம் வீடுகளை பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில்- வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து மன நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளை பெற முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் பல்வேறு வலமான பலன்களை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் சனி 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கேது குரு நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு 2-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்கள் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். ஏழரைச்சனி நடப்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது, குறிப்பாக வேலை பளுவை குறைத்து கொள்வது நல்லது. கேது சுவாதி நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில்- வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 3-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்தால் நீங்கள் எதிலும் தைரியத்துடன் செயல்பட முடியும். குரு வரும் 22-04-2023 முடிய 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் நலத்திற்கு முக்கியதும் தருவது நல்லது. அலைச்சல் டென்ஷன் காரணமாக உடல் அசதி ஏற்படும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து மன நிம்மதி அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதாலும் எதிர் நீச்சல் போட்டாவது நன்மைகளை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில்- வியாபாரத்தில் ஒரு சில அனுகூலம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். சிறுசிறு நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். சக ஊழியார்கள் உதவி கிடைப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,     கிழமை - வெள்ளி, சனி                    திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                    தெய்வம் - ஐயப்பன்

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

No comments: