Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 சிம்மம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 சிம்மம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவில் சிறுசிறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள் என்றாலும் சனி 6-ல் ஆட்சி பெற்று 17-01-2023 வரை சஞ்சரிப்பதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் தக்க நேரத்தில் வர வேண்டிய பண வரவுகள் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.

குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 2, 4, 12-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பிறகு நற்பலன் கிடைக்கும். சிலருக்கு சொத்துகளை பராமரிப்பு செய்வற்காக சுப செலவுகள் செய்ய நேரிடும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. புதிய வாகனங்கள், நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. ராகு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அமையும். தந்தை, தந்தை வழி உறவுகளிடைய சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.

தொழில் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சில நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் தனி திறனுடன் செயல்படுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேலையாட்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்க முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். உங்கள் மீது இருந்த வீண் பழிச் சொற்கள் விலகி நிம்மதியுடன் பணி புரிய முடியும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் மற்றவர்கள் பணியை நீங்கள் எடுத்து செய்ய நேரிடும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தூர பயணங்களால் அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதனால் மன நிம்மதியும் உண்டாகும்.

குரு 8-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் எதையும் சமாளித்து விட முடியும். வரும் 17-01-2023 முதல் சனி உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. சனி சாதகமாக சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மன நிம்மதியற்ற நிலை நீடிக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறைவு உண்டாகாது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமாக சுமுக தீர்வு ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

தொழில், வியாபாரம்

எடுக்கும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அதிகமான உழைப்பினை மேற்கொண்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகளை எளிதில் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. வேலையாட்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். வெளியூர் வெளிநாடு தொடர்புகளால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்யும் நோக்கங்களில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு உண்டாகி அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முயற்சிகளை எதிர்கொள்ள நேரிடும். பத்திரிக்கை செய்திகளாலும் தேவையற்ற வதந்திகளாலும் மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனை பெற முடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு தொடர்பான வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். விளை பொருளுக்கேற்ற விலை சற்று குறைவாக கிடைக்கும். பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியங்கள் கிடைத்து ஆறுதல் அடைவீர்கள்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும் போதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசு கிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் சில தடைகளுக்கு பின் நிறைவேறும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு அமைந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிள்ளைகளால் மன சஞ்சலங்களையும் எதிர்கொள்வீர்கள். தங்களுடைய மனக்குறைகளை கூட தகுதியானவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் நல்ல பதவியை அடையும் யோகம் உண்டு.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபக மறதி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. விளையாட்டி போட்டிகளில் கவனம் தேவை.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களது ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் 3-ல் கேது, 7-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் சற்று தாமதங்களுக்குப் பிறகு கிடைக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கடன் பிரச்சனைகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். முடிந்த வரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் ஓரளவு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கேது 3-ல், சனி 6-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் பைசலாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு வரவேண்டிய ஊதிய பாக்கிகள் கிடைத்து கடன்கள் கு¬யும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.  பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் சனி 6-ல், கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் தேவைகேற்ப தக்க நேரத்தில் பணவரவுகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினைகள் முழுமையாக விலகி ஒற்றுமை நிலவும். வயது மூத்தவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாமல் இருந்தாலும் புதிய ஆர்டர்கள் கிடைத்து தன லாபத்தை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாக இருக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட முடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற் கொள்வீர்கள்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குரு ஜென்ம ராசிக்கு 2, 11-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறு சிறு தடைகளை எதிர் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி, வயிறு பாதிப்புகள் தோன்றலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். தற்போது உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தால் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.

 

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 8-ல் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                      நிறம் - வெள்ளை, சிவப்பு               கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் -  மாணிக்கம்      திசை - கிழக்கு                                      தெய்வம் - சிவன்

No comments: