Saturday, December 24, 2022

கடகம் - புத்தாண்டு பலன் - 2023

 



கடகம் - புத்தாண்டு
பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

கடகம்  ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

சந்திரனின் ராசியில் பிறந்து சிறந்த கற்பனை திறனும், மற்றவர்களை கவரும் பேச்சுத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே, எடுக்கும் செயல்களில் விடா முயற்சியுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படக்கூடிய உங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 முடிய பாக்ய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்கள் உங்களின் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும் நீங்கள் எண்ணியதை செயல்படுத்துவது என்றால் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்வது நல்லது. திருமண முயற்சிகள் ஆண்டில் தொடக்கத்தில் மேற்கொண்டால் அதில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். வரும் 22-04-2023 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க உள்ளதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பொருளாதார நிலையானது ஏற்ற இறக்கமாக இருக்கும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவினை அடைவதில் தேவையற்ற சுணக்கங்கள் ஏற்படலாம்.

பொருளாதார ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்ப்பது, எதிலும் கையிருப்பை கொண்டு செயல்படுவது நல்லது. அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுபச் செலவுகளை மேற்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள் மூலமாக எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்ள கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டால் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். சில வெளிநபர்கள் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் சற்று குறையும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். நீங்கள் எதிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருந்தாலும் உங்களின் உடல் நிலையானது அன்றாட செயல்களுக்கு ஒத்துழைக்காது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொல்களை சொல்வார்கள்

வரும் ஆண்டில் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடைபெற இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். 2023-ஆம் ஆண்டில் கேது 4-லும் ராகு 10-லும் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக கூட எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிக்கனமாக இருந்தால் ஏற்படக்கூடிய சிறு சிறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையலாம்.

 

உடல் ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை திறன்பட செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். நெருங்கியவர்களிடம் ஏற்படக் கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக ஒய்வு நேரம் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்குள் நல்லது நடக்கும். அசையும் அசையா சொத்துகளில் செய்யும் முதலீடு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், எதிர்பாராத வகையில் கடன் ஏற்படும் நிலை உண்டாகும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

உத்தியோகம்

நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் உடல் ஆரோக்கிய குறைப்பாட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்லது நடக்கும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் மறைமுக எதிர்ப்புகளை எதிர் கொள்ள நேரிடும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும் என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் செயல்களில் கவனமுடன் செயல்படுவது கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் லாபகரமான பலனை அடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

எதிர்பார்த்த லாபத்தை ஆண்டின் தொடக்கத்தில் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டி இலக்கை அடையலாம். தக்க சமயத்தில் தாராள தன வரவு உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும், நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதையும் தவிர்ப்பது நல்லது.

அரசியல்

உங்களது செல்வம், செல்வாக்கு உயரும் என்றாலும் எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படும். எந்தவொரு பணியிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைப்பது நல்லது.

கலைஞர்கள்

உங்களுக்கு அனுகூலப் பலன்கள் ஏற்படும் யோகம் ஆண்டின் தொடக்கத்தில் உண்டு. தொழில் போட்டிகளால் நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். நடிப்பு துறை மட்டுமின்றி பாடல் இசை துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான நிலை ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் மனச் சஞ்சலங்களும் வீண் செலவுகளும் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த புத்திர பாக்கியம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நன்று. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறையும். பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு, ஏழைகளுக்கு உதவி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 23-01-2023 பகல் 01.50 மணி முதல் 25-01-2023 பகல் 02.30 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு குரு 9-ல், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில் பொருளாதார நிலை லாபகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற பயணங்களினால் வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்பட்டு மனநிம்மதி குறையும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், சிறு சிறு மருத்துவ செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெறலாம். சிவ பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 20-02-2023 அதிகாலை 01.15 மணி முதல் 22-02-2023 அதிகாலை 01.10 மணி வரை.

மார்ச்.

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகர் வழிபாட்டையும், துர்கை வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 19-03-2023 பகல் 11.17 மணி முதல் 21-03-2023 பகல் 11.57 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன், 10, 11-ல் புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புடன் கூடிய கௌரவ பதவிகள் கிடைக்கும். துர்க்கை வழிபாடு, சனி ப்ரீதி நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 15-04-2023 மாலை 06.44 மணி முதல் 17-04-2023 இரவு 08.52 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, சிக்கனமாக செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசு அதிகாரிகள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். துர்க்கையம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 12-05-2023 இரவு 12.19 மணி முதல் 15-05-2023 அதிகாலை 03.24 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசியில் செவ்வாய், 8-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். இம்மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். விநாயகர் வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 09-06-2023 காலை 06.02 மணி முதல் 11-06-2023 காலை 08.46 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 8-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பதும், பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள், எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக ஒய்வு நேரம் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வது, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 06-07-2023 பகல் 01.38 மணி முதல் 08-07-2023 பகல் 02.57 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். முன்கோபத்தை குறைப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். குரு 10-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இம்மாதம் 18-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது நல்லது. சிவன், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 02-08-2023 இரவு 11.25 மணி முதல் 04-08-2023 இரவு 11.17 மணி வரை மற்றும்  30-08-2023 காலை 10.18 மணி முதல் 01-09-2023 காலை 09.35 மணி வரை.

செப்டம்பர்.

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். மகாலட்சுமி வழிபாடு, ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 26-09-2023 இரவு 08.28 மணி முதல் 28-09-2023 இரவு 08.28 மணி வரை.

அக்டோபர்.

மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு, சனி வக்ர கதியில் இருப்பதாலும் உங்களின் பொருளாதார நிலை சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் ஆதராயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்கையம்மன் வழிபாடு, சனி கிழமை விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் - 24-10-2023 அதிகாலை 04.22 மணி முதல் 26-10-2023 அதிகாலை 05.57 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 4, 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். 3-ல் கேது, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறைந்து அனுகூலமான பலன்களை பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். முருக வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 20-11-2023 காலை 10.07 மணி முதல் 22-11-2023 பகல் 12.57 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபார ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை திறமையுடன் சமாளித்து ஏற்றமான பலன்களை அடைவீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 17-12-2023 மாலை 03.45 மணி முதல் 19-12-2023 மாலை 06.20 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து       திசை - வடகிழக்கு               தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: