Sunday, December 31, 2023

Today rasi palan - 01.01.2024

 


Today rasi palan - 01.01.2024

இன்றைய ராசிப்பலன் -  01.01.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-01-2024, மார்கழி 16, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.28 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மகம் நட்சத்திரம் காலை 08.36 வரை பின்பு பூரம். மரணயோகம் காலை 08.36 வரை பின்பு சித்தயோகம்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

ராகு

  குரு

 

 

 

சனி

 

01.01.2024

 

 

சந்தி

சூரிய செவ்

புதன் (வ)

சுக்கி

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  01.01.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கன்னி

இன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்த்து எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்தால் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.

கும்பம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

Saturday, December 30, 2023

Today rasi palan - 31.12.2023

 


Today rasi palan - 31.12.2023

இன்றைய ராசிப்பலன் -  31.12.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-12-2023, மார்கழி 15, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.56 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

ராகு

  குரு (வ)

 

 

 

சனி

 

31.12.2023

 

 

சந்தி

சூரிய செவ்

புதன் (வ)

சுக்கி

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  31.12.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில்  வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சிளை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் நிலை சீராகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.