மேஷம் -
சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip
in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர்
- பால ஜோதிடம் (வார இதழ்)
No: 19/33 வடபழனி
ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600
026 இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
மேஷம்
( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )
செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம்
தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி
17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026
வரை) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11--ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி
11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும்.
இது நாள் வரை 10-ல் சஞ்சாரம் செய்ததால் தொழில், உத்தியோக ரீதியாக உங்களுக்கு தேவையற்ற
இடர்பாடுகள் இருந்தது. தற்போது அவை எல்லாம் விலகி எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்து கடன்களை
பைசல் செய்ய முடியும். புதிய தொழில் தொடங்க வேண்டும், இருக்கும் தொழிலை அபிவிருத்தி
செய்ய வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு வரும் நாட்கள் ஒரு பொற்காலம் எனலாம். பெரிய
முதலீடு செய்து நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக
மாறுவதால் பல்வேறு வளமான பலன்களை பெற முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல்
எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும், விரும்பிய இடம் மாற்றங்களையும் அடைய முடியும். உங்கள்
தகுதிக்கான வேலை வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு மனமகிழ்ச்சி தரக்கூடிய
பதவியினை எட்ட முடியும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களுக்கு நல்லது
நடக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும்
யோகம், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள்
எல்லாம் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை உயரும்.
சனிபகவான் சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய
குருபகவான் 01-05-2024 முதல் 14-05-2025 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய
இருக்கக்கூடிய காலமானது மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடக்கூடிய அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து வகையில்
அனுகூலங்கள் போன்றவை ஏற்படும் யோகம் உண்டு. சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல்
வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை சஞ்சரிக்கும் காலத்தில் மேலும் சிறப்பான பலன்களை
அடைவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு.
உடல் ஆரோக்கியம்
உங்களது உடல்நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டர்களுக்கு தற்போது வீண் செலவுகள் குறைந்து
சேமிக்க முடியும். உங்கள் செயல்களுக்கு வெற்றி கிடைப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
மங்களகரமான சுபகாரியங்கள் நிறைவேறி உங்களின் கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.
குடும்பம்
பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவு மகிழ்ச்சி உண்டாகும். சர்ப
கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் அக்டோபர் 2023 வரை கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து
செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய
யோகமானது உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் கனவுகள்
நிறைவேறும்.
கொடுக்கல்-
வாங்கல்
பண பரிவர்த்தனைகளில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி அனுகூலமான
நிலை உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண முடியும். கடன்கள்
படிப்படியாக குறையும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின்
நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டு நட்புடன் பழகுவார்கள். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு
உங்களுக்கு சாதகமாக அமையும். பங்காளிகளின் ஆதரவானது சிறப்பாக இருக்கும்.
தொழில்
வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் படிப்படியாக நிறைவேறும்.
தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளையும், பொருளாதார உதவிகளையும்
பெற முடியும். ஜெனன ஜாதகத்தில் சொந்த தொழில் யோகமும் சிறப்பாக இருந்தால் புதிய தொழில்
தொடங்கி வெற்றி காண முடியும். வேலையாட்கள் உதவியாக இருப்பது மட்டுமில்லாமல் திறமை வாய்ந்த
வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள்.
உத்தியோகம்
கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் வருகின்ற நாட்களில்
நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் செய்த பணிக்கான தக்க சன்மானம் தற்போது கிடைத்து கடன்களை
பைசல் செய்ய முடியும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்ட
நாட்களாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள், சம்பள பாக்கிகள் எல்லாம் வருகின்ற நாட்களில்
கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து
அழைப்பு வரும்.
அரசியல்
உங்களின் பெயர், புகழ் மேலோங்ககூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
இருக்கும் இடத்தில் மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு பொதுகாரியங்களில்
ஈடுபட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசு அதிகாரிகளுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால்
பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட முடியும். வெளியூர் பயணங்களால்
மகிழ்ச்சி ஏற்படும்.
விவசாயிகள்
உங்கள் உழைப்பு வீண் போகாமல் பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும்.
உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் வாங்கிய கடன்களை
பைசல் செய்வது மட்டுமில்லாமல் புதிய விளைநிலங்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த மானிய உதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நவீன யுக்திகளை
பயன்படுத்தி உங்கள் விவசாயத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.
பெண்கள்
தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சார்ந்த குடும்பத்தின்
பொருளாதார நிலை மிக திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மத்தியில் ஒரு கௌரவமான
நிலை உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது
மட்டுமில்லாமல் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு
பதவி உயர்வும், திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில்
மனம் மகிழும் இனிய நிகழ்வுகள் நடக்கும். மக்கள் மத்தியில் நீங்காத பெயரை வாங்கித் தரக்
கூடிய அளவிற்கு நல்ல கதாபாத்திரம் உங்களுக்கு கிடைக்கும். நடிப்பில் உங்களின் செயல்பாடு
சிறப்பாக இருந்து மக்கள் மத்தியில் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பது
மட்டுமில்லாமல் ஆதரவு பெருகும்.
மாணவ மாணவியர்
உங்களின் ஞாபக சக்தி சிறப்பாக இருந்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று
பள்ளி, கல்லூரிகளுக்கு நல்ல பெயர் வாங்கி தருவீர்கள். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில்
பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற முடியும். உங்களுக்கு இருந்த தேவையற்ற நட்புகள்
விலகி நல்ல நண்பர்கள் உங்களுடன் இணைவார்கள்.
சனிபகவான்
அவிட்ட நட்சத்திரத்தில் 17-01-2023 முதல்
14-03-2023 வரை
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில்
சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பணவரவுகள்
தாராளமாக இருந்து உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். கணவன்- மனைவி இடையே விட்டுக்
கொடுத்து செல்வது, முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. குரு 12-ல் இருப்பதால்
ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள்
குறைந்து நல்ல லாபத்தை பெறுவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமானது
உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம்
ஏற்றுவது உத்தமம்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 15-03-2023
முதல் 17-06-2023 வரை
ஜென்ம ராசிக்கு 11-ல் சனி ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்ல
பெயர் எடுப்பீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
கடந்த கால வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து மன நிம்மதி உண்டாகும்.
குரு சாதகமற்று இருப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது.
ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில்,
வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல், தொழில் அபிவிருத்தி முயற்சிகள்
வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து
குடும்பத்தோடு சேர முடியும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு திருப்திகரமாக இருக்கும். குரு
பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது, பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நன்று.
சனிபகவான்
வக்ர கதியில் 18-06-2023 முதல் 04-11-2023 வரை
உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிக்க இருப்பதால்
நீங்கள் அடைய வேண்டிய பலன்களை அடைவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பண வரவுக்கு எந்த
விதத்திலும் குறை இருக்காது. ஜென்ம ராசியில் குரு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். மங்களகரமான
சுப காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்திலிருந்து
நெருக்கடிகள் குறையும். வெளியூர் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில்
உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடம் மாற்றங்களை
அடையக்கூடிய ஒரு யோகம் உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சனிபகவான்
அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல்
23-11-2023 வரை
சனி அவிட்ட நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
கேது 6-ல் இருப்பதால் உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும்.
பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில்
நவீன யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கடன் பிரச்சினைகள் எல்லாம்
படிப்படியாக குறையும். குரு 5, 7, 9-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் பிள்ளைகள் வழியில்
அனுகூலங்கள், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வகையில்
அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோக ரீதியாக உயர்வான நிலையினை எட்டும் அமைப்பு,
உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் விலகி எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். துர்க்கையம்மனை
தரிசிப்பது நன்மை தரும்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 24-11-2023
முதல் 06-04-2024 வரை
சனி லாப ஸ்தானத்தில் ராகு நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கின்ற இக்காலத்தில்
எதிர்பாராத அனுகூலங்கள் உங்களுக்கு கிடைக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும்
ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும்.
கணவன்- மனைவி இடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு
நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள்
அதிகரிப்பது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உங்களுக்கிருந்த மறைமுக
எதிர்ப்புகள் மறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். அரசு மூலம்
எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சியான
நிலை, உங்கள் உழைப்புக்கான ஊதியத்தைப் பெறும் அமைப்பு, உயர் பதவிகளை அடையும் யோகம்
ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சனிபகவான்
பூரட்டாதி நட்சத்திரத்தில் 07-04-2024
முதல் 29-06-2024 வரை
சனி குரு நட்சத்திரமான பூரட்டாதியில் 11-ல் சஞ்சரிப்பதால் உங்களின்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். நவீனகரமான
பொருட்களை வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு. 01-05-2024 முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பதால்
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியினை
அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை போன்றவற்றினை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகளும் உடன் இருப்பவர்களால் இருந்த
நெருக்கடிகள் விலகக்கூடிய யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள்
ஏற்பட்டு குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சர்பேஸ்வரர் வழிபாடு நன்மை
தரும்.
சனிபகவான்
வக்ர கதியில் 30-06-2024
முதல் 15-11-2024 வரை
சனி வக்ர கதியில் சஞ்சரித்தாலும், தன ஸ்தானத்தில் குருவும், 6-ல் கேதுவும்
சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கணவன்- மனைவி இடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில்
வேலையாட்கள் சிறு சிறு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் அடைய வேண்டிய
லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பனிச்சுமை இருந்தாலும் அதற்கான
ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய பதவி உயர்வுகள்
கிடைத்து உயர்வான நிலையை அடைவீர்கள். நீண்ட நாட்களாக வரவேண்டிய பண வரவுகள் வந்தடைந்து
உங்களின் கடன் பிரச்சனைகள் குறையும். சிலருக்கு அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய
வாய்ப்பு உண்டாகும். துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 16-11-2024
முதல் 27-12-2024 வரை
சனி 11-ல் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் கேது சஞ்சரிப்பதும்
உன்னதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்வது மட்டுமில்லாமல் மறக்க முடியாத
இனிய நிகழ்வுகள் நடக்கும். நினைத்த காரியங்கள் கைக்கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
எதிர்பாராத பண வரவுகளால் உங்களுக்குள்ள அனைத்து விதமான குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும்.
வண்டி, வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலுக்காக
முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகளும், போட்ட முதலீட்டை விட அதிகப்படியான லாபத்தை அடையும்
வாய்ப்பும் உண்டாகும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு வேலை பளு குறைவது மட்டுமில்லாமல் பணியில் நிம்மதியுடன் பணியாற்ற முடியும்.
பிறருடைய வேலையும் சாமர்த்தியமாக செய்து முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
பாம்பு புற்றுக்கு பால் விடுவது கெடுதியை குறைக்கும்.
சனிபகவான்
பூரட்டாதி நட்சத்திரத்தில் 28-12-2024
முதல் 29-03-2025 வரை
சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்
2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை,
எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து
கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியான
செய்தி கிடைக்கும். உடல் உபாதைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில்,
வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலைக்கு
செல்பவர்களுக்கு பணியில் சந்தோஷமான நிலை, எதிர்பாராத பதவி உயர்வு கிடைத்து ஒரு உயர்வான
நிலையை எட்டும் வாய்ப்பு ஏற்படும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். விநாயகர்
வழிபாடு, அஷ்டலஷ்மி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்டம்
அளிப்பவை
எண் - 1,2,3,9, நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல் - பவளம் திசை - தெற்கு தெய்வம்
- முருகன்
No comments:
Post a Comment