ரிஷபம்
- சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip
in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர்
- பால ஜோதிடம் (வார இதழ்)
No: 19/33 வடபழனி
ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600
026 இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம்
1,2-ஆம் பாதங்கள் )
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம்
தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி
17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026
வரை) ஜீவன ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க
உள்ளார். உங்கள் ராசிக்கு சனி 9, 10-க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்ற காரணத்தால்
இயற்கையிலேயே பல்வேறு நற்பலன்களை வழங்கக்கூடிய அமைப்பைக் கொண்டவர் என்றாலும், 10-ல்
சஞ்சரிக்க உள்ளதால் அனைத்து செயலிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை இருக்கும். சனி
ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் ரீதியாக நீங்கள் சிந்தித்து செயல்பட்டால்
அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் கால நேரம்
பார்க்காமல் கடினமாக உழைத்தால் மட்டுமே தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க
முடியும். சில வேலைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து தருவதன் மூலமாக உங்களுக்குள்ள
வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.
அதிகப்படியான அலைச்சலால் உங்களின் ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல்
மனதளவில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகள் காரணமாக தொழில், வியாபாரத்தில்
உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிப் போகும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து
செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களில்
யோசித்து செயல்படுவது, முதலீடுகளை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள்
பெயரில் செய்வது நன்மையை தரும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் கவனமாக செயல்பட வேண்டிய நேரமாகும்.
உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் சில இடையூறுகள் இருந்தாலும், எடுத்த பணிகளை குறித்த
நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும் என்றாலும் அதற்கான
சன்மானங்கள் கிடைக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை
இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்
கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும்.
உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின்
ஆதரவால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில்
சுபச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும்.
சனி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டுக் கோளான குருபகவான்
22-04-2023 முதல் 01-05-2024 வரை விரைய ஸ்தானத்திலும், 01-05-2024 முதல் 14-05-2025
வரை வரை ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது
நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் என்றாலும் உடனிருப்பவர்களே தேவையற்ற
இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சர்ப்ப கிரகமான கேது 30-10-2023
வரை சஞ்சரிப்பதும், அதன் பின் 11-ல் ராகு 30-10-2023 முதல் 18-05-2025 வரை சஞ்சாரம்
செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து குடும்ப
தேவைகள் பூர்த்தியாகும். ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை
அடைய முடியும்.
உடல் ஆரோக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும் என்றாலும் நிதானமாக
செயல்படுவதன் மூலமாக வீண் மருத்துவ செலவுகளை குறைக்க முடியும். அதிக அலைச்சல் காரணமாக
உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும் என்பதால் அதன் காரணமாக உடல் அசதி ஏற்படலாம். ஒவ்வொரு
காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.
பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது நிதானம் தேவை.
குடும்பம்
பொருளாதார நிலை
கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின்
ஆதரவின் காரணமாக உங்களுக்கு உள்ள பெரிய நெருக்கடிகளை கூட எளிதில் சமாளிக்க முடியும்.
பொருளாதார நிலையானது திருப்திகரமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொள்வது, சிக்கனமாக இருக்கவும்.
கொடுக்கல்-
வாங்கல்
பணப்பரிமாற்ற விஷயங்களில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்பட வேண்டிய
நேரமாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துகின்ற பொழுது உங்கள் பெயரில் மட்டும் செய்யாமல்
மனைவி, பிள்ளைகள் பெயரில் செய்வது கூட நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும்
என்றாலும் உங்களின் தனித்திறனால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கொடுத்த
வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
தொழில்
வியாபாரம்
தொழில், வியாபார ரீதியாக நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் உங்களுக்கு
கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். மறைமுக போட்டிகள் காரணமாக நல்ல வாய்ப்புகளில்
சில சுனக்கங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகரிப்பதால்
லாபங்கள் சற்று குறையும். வேலையாட்களை அனைத்து விஷயத்திலும் நம்பாமல் சில நேரங்களில்
நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் சில சிக்கல்களை சமாளிக்க முடியும். நீங்கள் எதிர்பார்க்கும்
பொருளாதார உதவிகள் தாமதப்படும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும்
உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிக பணிச்சுமை
காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஓய்வு நேரம் குறைவதால் உடல்
சோர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்க
முடியும். தற்போது நீங்கள் இருக்கும் நிலையே உங்களுக்கு நல்லது என்பதால் பிறர் சொல்வதை
எல்லாம் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
அரசியல்
அரசியல்வாதிகள் நல்ல உயர்வினை அடையும் வாய்ப்பு இருந்தாலும் பேச்சில்
பொறுமையோடு இருப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற சில நேரங்களில்
உங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கும். அரசியல் தலைவர்களிடம் வீண்
வாக்குவாதங்கள் செய்யாமல் பொறுமையோடு செயல்பட்டால் சிறு தடைக்குப் பிறகு அடைய வேண்டிய
பதவிகளை அடைய முடியும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு விளைச்சல் சாதகமாக இருந்தாலும் உங்கள் பொருட்களுக்கு
சந்தையில் நல்ல வேலை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். புழு, பூச்சிகள் தொல்லை, கூலியாட்களுடைய
நெருக்கடிகள் காரணமாக பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு வழியில் கிடைக்கக்கூடிய
மானிய தொகைகள் மூலமாக மன அமைதி ஏற்படும். பங்காளியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு
இருப்பது நல்லது. நிலத் தொடர்பான வம்பு, வழக்குகளில் பேச்சை குறைத்தால் சாதகமான தீர்ப்பை
அடைய முடியும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய
ஒரு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் உற்றார் உறவுகளிடம் பேச்சில்
கவனத்தோடு இருந்தால் சிறு தடைக்குப் பிறகு மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணிபுரியும்
பெண்களுக்கு பணியில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஊதியத்தை அடைய முடியும். மற்றவர்களுடைய
பணியையும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும்.
கலைஞர்கள்
நல்ல கதாபாத்திர வாய்ப்பு கிடைத்து உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும்.
வாய்ப்புகள் அதிகம் கிடைத்தாலும் அதற்கான ஊதியம் சற்று குறைவாக இருக்கும். அடிக்கடி
பயணங்கள் மேற்கொள்வதால் உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும். வெளி நபர்களிடம்
குடும்ப விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது.
மாணவ மாணவியர்
மாணவ, மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று
பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பழகக் கூடிய நபர்களால்
சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் பேச்சில் பொறுமையோடு
இருப்பது, கவனத்தோடு பழகுவது நல்லது. போட்டி தேர்வுகளில் முனைப்புடன் செயல்பட்டால்
பரிசுகளை வெல்ல முடியும். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி
தரும்.
சனிபகவான்
அவிட்ட நட்சத்திரத்தில் 17-01-2023 முதல்
14-03-2023 வரை
சனி பகவான் 10--ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள்
சில விஷயங்களில் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் குரு 11-ல், கேது 6-ல்
சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை திருப்திகரமாக
அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். உடல் நிலை நன்றாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக
செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை
அனுசரித்து சென்றால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று
உங்களுடைய நெருக்கடிகள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு
இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல்
இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சர்பேஸ்வரர் வழிபாடு,
உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மை தரும்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 15-03-2023
முதல் 17-06-2023 வரை
சனி 10-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஒரு முயற்சிகளில் ஈடுபடுகின்ற
பொழுது சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் 22-04-2023 வரை குரு
11--ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துகின்ற பொழுது கவனமாக செயல்படுவது நல்லது. வெளியூர்
பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள்
இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளை
கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் பேச்சைக்
கேட்காமல் உங்கள் பணியில் கவனம் செலுத்துவதும், அதிகாரிகளை அனுசரித்து செல்வதும் நல்லது.
துர்க்கை அம்மனை தரிசிப்பது, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியை குறைக்கும்.
சனிபகவான்
வக்ர கதியில் 18-06-2023 முதல் 04-11-2023 வரை
சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் ஏற்படும்.
கேது பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குரு விரய ஸ்தானத்தில்
சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது
நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய
ஆற்றலை அடைவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில்,
வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் சற்று குறைந்து லாபகரமான பலன்களை அடைய முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களால்
இருந்த தொந்தரவுகள் எல்லாம் விலகும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம்
பொருளாதர ஆதாயங்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சனிபகவான்
அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல்
23-11-2023 வரை
சனி பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில்
சில இடையூறுகளை சந்தித்தாலும் உங்களின் தனித்திறமையால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய
வேண்டிய இலக்கை அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் ராகு 11-ல்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும்
கவனத்தோடு இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களை தவிர்ப்பது
உத்தமம். வேலையாட்களால் சிறு சிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு
வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களை
தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக செலவுகள் செய்ய நேரிடும். அலைச்சல்
காரணமாக ஓய்வு நேரம் குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்
ஏற்றுவது நல்லது.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 24-11-2023
முதல் 06-04-2024 வரை
சனி, ராகு நட்சத்திரமான சதயத்தில் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால்
எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். தேவையற்ற அலைச்சல், இருப்பதை
அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள்
ஏற்படும் என்பதால் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில்
ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது நிலைமையை சமாளிப்பீர்கள். குடும்பத்தில்
நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் நெருங்கியவர்களாலே தடைப்படும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற
கவலைகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை
எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு
நேரம் குறையும் சூழல் ஏற்படும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும்.
விநாயகர் வழிபாடு, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நல்லது.
சனிபகவான்
பூரட்டாதி நட்சத்திரத்தில் 07-04-2024
முதல் 29-06-2024 வரை
சனி பகவான் குருவீன் நட்சத்திரமான பூரட்டாதியில் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்
எந்தவித பிரச்சினையையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால்
சில நெருக்கடிகள் இருந்தாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை உண்டாகும். தடைப்பட்ட சுப
காரியங்கள் கைகூடும். பங்காளியிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.
பூர்வீக சொத்து வகையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில்
ஒவ்வொரு செயலிலும் நீங்களே நேரடியாக ஈடுபட்டால் அனுகூலங்களை அடைய முடியும். கூட்டாளிகள்
ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மற்றவர்கள் பணியும் சேர்த்து
செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
சனிபகவான்
வக்ர கதியில் 30-06-2024
முதல் 15-11-2024 வரை
உங்கள் ராசிக்கு 10-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவியிடையே
அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது
நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த பொருளாதார தேக்கங்கள் விலகி நல்ல லாபங்களை
அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோக
ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், சிலருக்கு பதவி உயர்வுகளை அடையும் வாய்ப்பும்
ஏற்படும். நீண்ட நாட்களாக புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில்
இருந்து அழைப்பு வரும். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது கெடுதியை குறைக்கும்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 16-11-2024
முதல் 27-12-2024 வரை
சனி 10-ல் ராகு நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை
குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத
விஷயத்திற்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால்
திருமண சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் ராகு
11-ல் இருப்பதால் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் வேலையாட்களுடைய
ஆதரவால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். தொழில் ரீதியாக இருக்கக்கூடிய சட்ட சிக்கல்கள்
மனக்கவலையை தரும். உத்தயோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைபளு காரணமாக மன உளைச்சல்
அதிகரிக்கும். அதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம்
செலுத்துவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். விநாயகர் வழிபாடு
கெடுதியை குறைக்கும்.
சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28-12-2024
முதல் 29-03-2025 வரை
சனி பகவான் 10-ல் குரு நட்சத்திரத்தில் இருப்பதால் நீங்கள் சற்று நிதானத்தோடு
செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நெருங்கியவர்களை அனுசரித்து
செல்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு
இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடக்கும் யோகம், பூர்வீக சொத்து
வகையில் ஒரு சில அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் இருந்தாலும்
அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் வீண் இழப்புகளை
தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியினுடைய அதிருப்திக்கு
ஆளாக கூடிய நிலை இருந்தாலும் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு எதையும் சமாளிப்பீர்கள்.
மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்டம்
அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் - வெண்மை, நீலம், கிழமை - வெள்ளி, சனி
கல் - வைரம் திசை - தென்கிழக்கு, தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி
No comments:
Post a Comment