Pages

Saturday, August 29, 2015

பாதகாதிபதியின் லீலைகள்



 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

பாதகாதிபதியின் லீலைகள்  
                   
     நவகிரகங்கள் நம்மை வழி நடத்துகின்றன. ஜெனன காலத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு ஏற்ப நற்பலனும் தீய பலனும் ஏற்படுகிறது. பொதுவாக கேந்திர திரி கோணாதிபதிகள் யோகத்தை அளிக்கின்றனர். 3,6,8,12க்கு அதிபதிகள் கெடுதல்களை வழங்குகிறார்கள். இதை தவிர சில லக்னகாரர்களுக்கு சில கிரகங்கள் கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். அது எது என்று பார்த்தால் பாதகாதிபதியும், பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களும் எதிர்பாராத கெடுதல்களை உண்டாக்குகின்றனர். 

பன்னிரெண்டு லக்னத்தையும் சரம் ஸ்திரம், உபயம் என பிரித்துள்ளார்கள். பாதக ஸ்தானம் எது என்று பார்த்தால் சர லக்னமான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவைக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீடு பாதக தானமாகும். 

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகிய ஸ்திர லக்னத்திற்கு 9ஆம் வீடு பாதக ஸ்தானமாகும்.

     மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னத்துக்கு 7ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். பாதக ஸ்தானாதிபதி, பாதகஸ்தானத்தில் அமையும் கிரகங்களின் போன்றவற்றின் தசா புக்தி காலத்தில் தொழில், பொருளாதார ரீதியாக நஷ்டம் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இடையூறு, எதிர்பாராத இழப்புகள் ஏற்படும்.

     சர லக்னத்திற்கு 11ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் மூத்த சகோதர வழியில் சோதனைகள் சகோதர தோஷம் உண்டாகிறது. 11ல் அமையும் கிரகங்களும் 11ஆம் அதிபதியும் சில கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். கெடுதல்கள் என்றால் முழுமையான  கெடுதல் அல்ல. சில சின்ன சின்ன கெடுதல்கள் ஏற்பட்டாலும் ஒரு சில வகையில் அனுகூலப் பலன்கள் உண்டாகிறது.

     ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் தந்தை வழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகிறது. உற்றார் உறவினர்கள் வகையிலும் ஒரு ஒற்றுமையில்லாத நிலை ஏற்படுகிறது. 9ஆம் அதிபதி ஸ்திர லக்னத்திற்கு பெரும்பாலும் கெடுதிகளை செய்வதில்லை.

     உபய லக்னத்திற்கு 7ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை. 7ஆம் வீடு கூட்டுத் தொழில் ஸ்தானம் என்பதால் உபய லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுத் தொழில் செய்தால் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகிறது. மிதுனம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனகாரகன் குருவே 7ஆம்  அதிபதியாகி பாதகாதிபதியாவதால் பொருளாதார ரீதியாக சங்கடங்கள், நெருங்கியவர்களுக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராத நிலை, கூட்டாளிகளிடம் பண விஷயத்தில் தகராறு உண்டாகும்.

     பாதக ஸ்தானாதிபதி கெடுதல்களை உண்டாக்குவார் என்றாலும் சில நேரங்களில் பாதகாதிபதியு-ம் கெடுதல்களை செய்வதில்லை. பாதகாதிபதி யாருக்கு கெடுதலை செய்ய மாட்டார் என்று பார்த்தால் 3,6,8,12ல் மறைந்திருந்தாலும், திரிகோண ஸ்தானமான 1,5,9ல் அமையப் பெற்றாலும் பாதகாதிபதி பாதக பலனுக்கு பதில் சாதக பலனை ஏற்படுத்துவார்கள்.

     பாதகாதிபதி, திதி, சூன்ய ராசியில் இருந்தாலும் பாதகாதிபதி பகை நீச ராசியில் இருந்தாலும்  பாதகாதிபதி சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றாலும் பாதகப் பலனை செய்வதில்லை. 

     பாதக ஸ்தானத்தில் ஒரு கிரகம் இருக்கின்றது என்றால் எது என்ன கிரகமே அக்கிரகத்தின் காரகத்துவ விஷயத்தில் மிகவும்  உஷாராக இருப்பது உத்தமம். 4ம் அதிபதி பாதக ஸ்தானத்திலிருந்தால் ஜாதகரின் பெயரில் உள்ள அசையும் அசையா சொத்திற்கு ஆபத்து என்பதால் அதனை குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களின் பெயர்களில் வைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.

     பாதகாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த பாவப் பலன் பாதிக்கப்படுகிறது. 4ல் இருந்தால் சொந்த வீடு அமைய இடையூறும், 5ல் இருந்தால் புத்திர தோஷமும், 9ல் இருந்தால் தந்தை வழியில் பகையும் உண்டாகிறது. பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் தசா புக்தியிலும் சாதகமற்ற பலன்களே உண்டாகின்றன. 

   10ம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் 10ல் உள்ள கிரகங்கள் பாதகாதிபதி சாரத்தில் இருந்தாலும் சொந்தத் தொழில் செய்ய கூடாது. அப்படி செய்தால் நஷ்டங்கள்  தான் ஏற்படும். பாதகாதிபதியின் தசா புக்தி காலங்களில் பொருளாதார ரீதியாக வரவுகள் ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக நம்பிக்கையான நபர்கள் மீது முதலீடு செய்வது நல்லது    


9 comments:

  1. ayya thangal pathivu mika sirappu.....


    kanni laknithirku pathakathipathi guru naankil aachi pettru , sani kethuvudan sernthu irunthal palan evvaru irukkum

    ReplyDelete
  2. ஐயா கன்னிராசி கன்னிலக்கினத்துக்கு
    பாதாகாதிபதி குரு தன்பகைவீடான ரிஷபத்தில் அமைந்திருப்பது நல்லதா.

    ReplyDelete
  3. கன்னி லக்னம் -லக்னத்தில் குரு சனி இணைவு என்ன பலன் ..தசா எப்படி இருக்கும் ஜயா

    ReplyDelete
  4. Mesam lagnathil padhagadhipathi sani neesa bangam adaindhal enna balan

    ReplyDelete
  5. If pathagaathipathi in neesa banga rajayogam ...theen what is palan ...good or bad????

    ReplyDelete
  6. எனக்கு மீன் லக்னம். கன்னி ராசி. சித்திரை 2. லக்னத்தில் குரு. கும்பத்தில் சூரியன் புதன். தற்போது புதன் தசை. என் வயது 58 .நல்லதா ...

    ReplyDelete
  7. ஐயா
    அடியேனுக்கு தெரிந்த பிரபல சோதிடர்- அவர் கணிப்பு எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகச்சரியாக இருந்தது!
    அவர் பெயர் சந்திரசேகரன்! 98401 72342
    kanchi_astro@yahoo.com!
    அவர் பாதகாதிபதியை ராசியில் இருந்தும் யோக்காரகனை இலக்கினத்தில் இருந்துமே காணவேண்டும் என்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா துலாம் லக்கினம் மிதுனம் ராசி பாதாக அதிபதி குரு என்று எடுக்க வேண்டுமா?

      Delete
  8. 6ம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்து தசை நடத்தினால்?

    ReplyDelete