Pages

Wednesday, April 30, 2025

Today rasi palan - 01.05.2025

 


Today rasi palan -
01.05.2025

இன்றைய ராசிப்பலன் -  01.05.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-05-2025, சித்திரை 18, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.24 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.20 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

ராகு புதன் சுக்கி சனி

சூரிய

குரு

சந்தி

 

 

01.05.2025

செவ்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  01.05.2025

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார தொடர்பாக நல்ல நட்புகள் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். நல்ல  வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கும். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.

துலாம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியும். கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்களது முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரம் ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

Tuesday, April 29, 2025

Today rasi palan - 30.04.2025

 


Today rasi palan -
30.04.2025

இன்றைய ராசிப்பலன் -  30.04.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-04-2025, சித்திரை 17, புதன்கிழமை, திரிதியை திதி பகல் 02.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.18 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். அக்ஷய திருதியை. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

ராகு புதன் சுக்கி சனி

சூரிய

குரு சந்தி

 

 

 

30.04.2025

செவ்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் - 30.04.2025

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும்.

கடகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த பண உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மன சங்டங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் நிலவும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

மகரம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரிதியாக தூர பயணங்களால் நல்லது நடக்கும்.

கும்பம்

இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

மீனம்

இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.