Today rasi palan - 17.06.2026
இன்றைய ராசிப்பலன்
- 17.06.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
17-06-2026, ஆனி 03, புதன்கிழமை, திரிதியை திதி
இரவு 09.39 வரை
பின்பு வளர்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் பகல்
01.37 வரை பின்பு பூசம். நாள்
முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 -
12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை
09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
|
சனி |
செவ் |
|
சூரிய சந்தி புதன் |
|
ராகு |
17.06.2026 |
குரு சுக்கி |
|
|
|
கேது |
||
|
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 17.06.2026
மேஷம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண்
விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல
மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப
காரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.
கடகம்
இன்று உங்கள் மனதிற்கு புது
தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றமான நிலை
ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத
நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலை
ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை
08.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.
தனுசு
இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை
08.13 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த
செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். உடல்நிலையில் கவனம் தேவை. அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மகரம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
இன்று நண்பர்கள் மூலம் சுப
செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியான பிரச்சினைகளில் சாதகமான பலன் கிட்டும்.
மீனம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன்
உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

