Today rasi palan - 09.10.2026
இன்றைய ராசிப்பலன்
- 09.10.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
09-10-2026, புரட்டாசி 22, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி இரவு 09.36 வரை
பின்பு அமாவாசை. உத்திரம் இரவு
09.20 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் இரவு 09.20 வரை
பின்பு அமிர்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற
நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை
06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
|
சனி (வ) |
|
|
|
|
ராகு |
09.10.2026 |
செவ் குரு |
|
|
|
கேது |
||
|
|
|
புதன் சுக்கி
(வ) |
சூரிய சந்தி |
இன்றைய ராசிப்பலன் -
09.10.2026
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன
கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல்
நலம் சீராக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை
கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.
ரிஷபம்
இன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்
வாங்கும் நிலை
உருவாகும். மன
உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
மிதுனம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண்
செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை
தாமதங்களுக்குப் பின்
அனுகூலப்பலன் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல
முன்னேற்றத்தை காணலாம்.
கடகம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிட்டும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
நீங்கள் எந்த
வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
துலாம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய
கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உடன்பிறந்தவர்கள் வழியாக சுப
செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி
உயர்வுகள் கிடைக்கும்.
மகரம்
இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண்
விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கும்பம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பேச்சை குறைப்பது உத்தமம்.
மீனம்
இன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன
பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட
நண்பர்களாக மாறி
செயல்படுவார்கள்.

No comments:
Post a Comment