Showing posts with label இன்று - 30.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 30.04.2017. Show all posts

Sunday, April 30, 2017

இன்று - 30.04.2017

இன்று -  30.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
30-04-2017, சித்திரை-17, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.49 பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 08.33 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சுக்கி
சூரிய
புதன்(வ)
செவ்
சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
30.04.2017



ராகு
சனி  (வ)

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  30.04.2017

மேஷம்
இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
ரிஷபம்
இன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள்  வசூலாகும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.
துலாம்
இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
தனுசு
இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.