Friday, September 28, 2018

Today rasi palan - 29.09.2018


Today rasi palan - 29.09.2018
இன்றைய ராசிப்பலன் -  29.09.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
29-09-2018, புரட்டாசி 13, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 02.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கார்த்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


சந்தி



திருக்கணித கிரக நிலை
29.09.2018
ராகு
கேது  செவ்

சனி

குரு  சுக்கி
சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  29.09.2018
மேஷம்
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.
மிதுனம்
இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
கடகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.
தனுசு
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
மகரம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

Thursday, September 27, 2018

Today rasi palan - 28.09.2018




Today rasi palan - 28.09.2018
இன்றைய ராசிப்பலன் -  28.09.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
28-09-2018, புரட்டாசி 12, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 08.44 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   


சந்தி



திருக்கணித கிரக நிலை
28.09.2018
ராகு
கேது  செவ்

சனி

குரு  சுக்கி
சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் - 28.09.2018
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.  தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்ககூடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.
கன்னி
இன்று நீங்கள் சற்று மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் அனுசரித்து சென்றால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.