Thursday, February 27, 2020

வார ராசிப்பலன் - மார்ச் 1 முதல் 7 வரை


வார ராசிப்பலன் - மார்ச் 1 முதல் 7 வரை 
மாசி 18 முதல் 24 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சந்தி சுக்கி

ராகு
புதன் (வ)
சூரிய
திருக்கணித கிரக நிலை


சனி

கேது குரு செவ்




கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்
28-02-2020 அதிகாலை 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.
ரிஷபம்
01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை.
மிதுனம்
03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை.
கடகம்
06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.03.2020 மாசி 19 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

06.03.2020 மாசி 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேலோங்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்று மந்தநிலை ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 4, 5.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழியாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சூரியன், புதன் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். செவ்வாய் 8-ல், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது உத்தமம். கிருத்திகையன்று விரதமிருந்து முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3, 6, 7.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தன்னுடைய  ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 9-ல் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். வியாபார ரீதியான பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 4, 5.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சனி 7-ல், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள், ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி கலை துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2, 3, 6, 7.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கும் யோகம், தொழில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் அமைப்பு உண்டு. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3, 4, 5.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டு. பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செவ்வாய், குரு 4-ல் இருப்பதால் பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் மற்றும் இடமாற்றமும் சிறு தடை தாமத்திற்கு பின் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் பேசும் போது பொறுமையை கடைப்பிடித்தால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழி சலுகைகள் கிடைக்கும். முருக வழிபாடும் லட்சுமி வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  4, 5, 6, 7.
சந்திராஷ்டமம் -   28-02-2020 அதிகாலை 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றியினை தரும் அமைப்பாகும். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தனவரவு உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  6, 7.
சந்திராஷ்டமம் -   01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
மற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 4-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றலை பெறுவீர்கள். தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு செய்வது, முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மேன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 2, 3.
சந்திராஷ்டமம் -   03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பது என்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, மாத கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பாகும். பொருளாதார ரீதியாக நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. திருமண சுபகாரியங்கள் சிறு தடைக்குப் பின் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தினைப் பெறமுடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் நற்பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3, 4, 5.
சந்திராஷ்டமம் -   06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியில் சனி, 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை பெறுவதில் சற்று சிரமபட வேண்டியிருக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன் 4-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  4, 5, 6, 7.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 5-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும் நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத உதவிகளும் சில கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நிறைய போட்டிகள் நிலவினாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றலை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதுடன் எதிர்பார்த்த உயர்வையும் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனி பிரதோஷ நாளில் சிவ பெருமானையும் சனி பகவானையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல தோஷங்களும் விலகி நன்மை உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  1, 6, 7.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டு பிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3.

Wednesday, February 26, 2020

Today rasi palan - 27-02-2020


Today rasi palan - 27-02-2020
இன்றைய ராசிப்பலன் -  27-02-2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
27-02-2020, மாசி 15, வியாழக்கிழமை, நாள் முழுவதும் சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 01.08 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சுக்கி சந்தி


ராகு
புதன் (வ)
சூரிய
திருக்கணித கிரக நிலை
27.02.2020

சனி

கேது குரு செவ்



இன்றைய ராசிப்பலன் -  27.02.2020
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.
கடகம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.
தனுசு
இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சாதுர்யமாக செயல்பட்டால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும்.




Own house / Tamil astrology / சொந்த வீடு யோகம் / Murugu Balamurugan

Tuesday, February 25, 2020

Today rasi palan - 26-02-2020


Today rasi palan - 26-02-2020
இன்றைய ராசிப்பலன் -  26-02-2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
26-02-2020, மாசி 14, புதன்கிழமை, திரிதியை பின்இரவு 04.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 10.08 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சுக்கி சந்தி


ராகு
புதன் (வ)
சூரிய
திருக்கணித கிரக நிலை
26.02.2020

சனி

கேது குரு செவ்




இன்றைய ராசிப்பலன் - 26.02.2020
மேஷம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
கன்னி
இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்களுடைய பிரச்சினைகள் குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.




Monday, February 24, 2020

Today rasi palan - 25-02-2020


Today rasi palan - 25-02-2020
இன்றைய ராசிப்பலன் -25-02-2020 
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
25-02-2020, மாசி 13, செவ்வாய்க்கிழமை, துதியை பின்இரவு 01.40 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 07.10 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 07.10 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சுக்கி


ராகு
புதன் (வ)
சூரிய சந்தி
திருக்கணித கிரக நிலை
25.02.2020

சனி

கேது குரு செவ்




இன்றைய ராசிப்பலன் - 25.02.2020
மேஷம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.27 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தூரபயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கன்னி
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
துலாம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.