Tuesday, December 29, 2020

Live chat December 29 | 248 th live | Q&A | Astrology | Dr.Murugubalamur...

Today rasi palan - 30.12.2020

 

Today rasi palan - 30.12.2020

இன்றைய ராசிப்பலன் -  30.12.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-12-2020, மார்கழி 15, புதன்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.58 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.55 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஆருத்ரா தரிசனம். ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

செவ்

ராகு

சந்தி

 

திருக்கணித கிரக நிலை

30.12.2020

 

குரு சனி

 

சூரிய புதன்

கேது சுக்கி

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  30.12.2020

மேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

விருச்சிகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

Monday, December 28, 2020

Today rasi palan - 29.12.2020

 

Today rasi palan - 29.12.2020

இன்றைய ராசிப்பலன் -  29.12.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-12-2020, மார்கழி 14, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.55 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 05.32 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 

செவ்

ராகு

சந்தி

 

திருக்கணித கிரக நிலை

29.12.2020

 

குரு சனி

 

சூரிய புதன்

கேது சுக்கி

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  29.12.2020

மேஷம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மீனம்

இன்று உடல் நிலையில் சோர்வு மந்த நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்கள் பாதியில் தடைபடலாம். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.