Friday, February 26, 2021

Today rasi palan - 27.02.2021

 

Today rasi palan - 27.02.2021

இன்றைய ராசிப்பலன் -  27.02.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

27-02-2021, மாசி 15 , சனிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 01.47 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மகம் நட்சத்திரம் பகல் 11.18 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மாசி மகம். கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

 

 

செவ் ராகு

 

சூரிய சுக்கி

திருக்கணித கிரக நிலை

27.02.2021

 

குரு  சனி

புதன்

சந்தி

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  27.02.2021

மேஷம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

ரிஷபம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கடகம்

இன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.

Thursday, February 25, 2021

Today rasi palan - 26.02.2021

 

Today rasi palan - 26.02.2021

இன்றைய ராசிப்பலன் -  26.02.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-02-2021, மாசி 14, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.50 வரை பின்பு பௌர்ணமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.35 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

 

 

செவ் ராகு

 

சூரிய சுக்கி

திருக்கணித கிரக நிலை

26.02.2021

சந்தி

குரு  சனி

புதன்

 

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  26.02.2021

மேஷம்

இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கொடுத்த கடன் வசூலாகும்.

மிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மன அமைதி இருக்கும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல் 12.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாக கூடும். உங்கள் ராசிக்கு பகல் 12.35 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.