Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 கும்பம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்பராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமும் உங்கள் ராசியாதிபதியுமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி உங்கள் ஜென்ம ராசியில் குரு, சுக ஸ்தானமான 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதாவது உடம்பு பாதிப்பு அதன் மூலம் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவ காப்பீடு எடுத்து வைத்து கொள்வது நல்லது.

பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். ஒரு சில உதவிகள் கிடைப்பதால் உங்கள் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும்.

கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். உங்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுப காரியம் கைகூடும் வாய்ப்பு அதன் மூலம் சுப செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்ப்பது அப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் என்தால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்களது உழைப்பிற்கான ஊதியம் அடைய முடியாத காலம் என்பதால் தேவையற்ற மன கவலை ஏற்படும். தற்போது இருப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணம் கோளாறு போன்றவை தோன்றும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை உற்றார் உறவினர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல்- வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றமான நிலையை அடைய முடியும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகள் உதவியால் அனுகூலம் அடைவார்கள். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, சரியான நேரத்தில் படபிடிப்பில் கலந்து கொள்வது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் சற்றே அலைச்சல் அதனால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

படிப்பு

கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகள் வீண் அலைச்சலையும், பிரச்சினைகளையும் உண்டாக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

 

மாதப்பலன்

சித்திரை

ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

வைகாசி

உங்கள் ராசிக்கு இம்மாதத்தில் 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் சேரும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆனி

உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் சிறு தடைக்குப் பின்  கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சிறப்பான பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

ஆடி

உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நற்பலன் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் செவ்வாய் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். முருகரையும் விநாயகரையும் வழிபடுவது உத்தமம்.

ஆவணி

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களே உங்கள் அமைதியை குறைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடிகள் நிலவினாலும் மந்தநிலை ஏற்படாது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.  

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் மனநிம்மதி குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிவனையும், முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். சிறப்பான பணவரவால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது

மார்கழி

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டானாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

தை

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறும் யோகம் உண்டு. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். சிவனையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.

மாசி

ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். மாத முற்பாதியில் சுக்கிரன், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

பங்குனி

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகி புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி         திசை - மேற்கு

கல் - நீலக்கல்  நிறம் - வெள்ளை, நீலம்          தெய்வம் - ஐயப்பன்

பிலவ வருட பலன்கள் 2021-2022 மகரம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி நேயர்களே!

உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் உஙகள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகளை சமாளிக்க  முன்னெச்சரிக்கையாக மருத்துவ காப்பீடு எடுத்து வைத்து கொள்வது நல்லது. அதிக அலைச்சல் காரணமான உடல் அசதி எதிலும் சோம்பேரித்தனம் ஏற்படும். முடிந்த வரை உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

     உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் தனகாரகன் என வர்ணிக்கப்படும் குரு உங்கள் ராசிக்கு 2-லும், கேது 11-லும் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் திருப்திகரமாக இருக்கும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லம் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து வழியில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

     தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கையும், போட்ட முதலீட்டையும் எடுத்து லாபம் காண முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களிலும் கொடுக்கல்- வாங்கலிலும் சற்று கவனத்துடன் இருந்தால் தேவையற்ற இழப்புகளையும் கடன்களையும் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும் யோகம் உண்டு. வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. முடிந்த வரை மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

இவ்வாண்டில் குரு 2-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் தேவையற்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எதிலும் திறன்பட செயல்பட்டு உங்கள் பணிகளை தக்க நேரத்தில் முடித்து விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அதன் மூலம் கடன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

கொடுக்கல் வாங்கல்

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் இருக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூமி மனை சேரும்.

கலைஞர்கள்

தேவையற்ற எதிர்ப்புகள் மறைவதால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் கைக்கு கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதிக அலைச்சலால் உடல் அசதி நேரத்திற்கு உணவு உன்ன இடையூறு ஏற்படும். முடிந்த வரை வேலைபளுவை குறைத்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும்.

படிப்பு

கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிவனையும், துர்கை அம்மனையும் வழிபடவும்.

வைகாசி

உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் 2-ல் குரு, மாத முற்பாதியில் 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மைகளும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்கிப் சேர்ப்பீர்கள். வெளியூர் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றிக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

ஆனி

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் லாபங்கள் அடைவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.    

ஆடி

ஜென்ம ராசியில் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்தவரை நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வடைய முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.      

ஆவணி

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். முருகரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.  

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன், 10,11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். பண வரவில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். தட்சிணாமூர்த்தியையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.   

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்து கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், கேது சஞ்சரிப்பதும் ஜென்ம ராசிக்கு 2-ல் வரும் 4-ஆம் தேதி முதல் குரு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வம்பு வழக்குகளில் சாதகப்பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும் அஷ்டலட்சுமியையும் வழிபடுவது நல்லது.

மார்கழி

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிறப்பான பணவரவால் பொருளாதாரம் உயர்வடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

தை

ஜென்ம ராசியில் புதன், 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் வளமான பலன்களை அடையும் யோகம் உண்டு. பண வரவில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதல் உண்டாகாது. முன்கோபத்தை குறைப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.

மாசி

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் நற்பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன் இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.        

பங்குனி

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்-கும் முயற்சியில் அனுகூலங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றும் யோகம் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். துர்கை அம்மனை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8     நிறம் - நீலம், பச்சை       கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்   திசை - மேற்கு             தெய்வம் - விநாயகர்

பிலவ வருட பலன்கள் 2021-2022 தனுசு

 பிலவ வருட பலன்கள் 2021-2022

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ராசியாதிபதி குரு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ளார். ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெற உள்ளது. உங்களது ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் எதிலும் முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது மூலம் வலமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும்.

இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 6-ல் சர்ப கிரகமாக ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும்.

     செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சில நேரங்களில் கிடைக்காது. எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செயல்படுவது மூலம் பெரிய பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். வெளியூர் பயணங்களால் அனுகூல பலன்கள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால சிக்கல்கள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கான பலன் கிடைக்க ஒரு சில இடையூறுகள் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள், கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். பணியில் கவனமுடன் செயல்படுவது பிறர் விஷயங்களில் தலையிடாது இருப்பது நல்லது.

இவ்வாண்டில் ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும் யோகம், பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகூடும் யோகம் ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனக் குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகளுக்கு முக்கியத்தும் கொடுத்தால் பெரிய பாதிப்புகளில் இருந்து எளிதில் சமாளித்து உடல் நலத்துடன் வாழ முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுப காரியங்கள் கைகூடும்.

கொடுக்கல் வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கடந்த கால வம்பு வழக்குகளில் ஒரு சில நல்ல முடிவுகள் இவ்வாண்டு கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் சுமாராக தான் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. கூட்டாளிகள் உதவியால் ஒரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் முழுமையாக திருப்தி இருக்காது. உடன் பழகுடவர்களுடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலனின்றி போகும். நீர் வரத்து குறைவதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வீண் பிரச்சினைகளில் சிக்கி பத்திரிக்கை செய்தி மூலம் மன அமைதி குறையும். உங்கள் தனி திறமையால் பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். இசை, நடனத் துறைகளில் உள்ளவர்களுக்கும் மேன்மையான பலன்கள் ஏற்படும்.

பெண்களுக்கு

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றவர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

படிப்பு

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பேசும் போது சற்று பொறுமையுடன் பேசுவது நல்லது.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலமான பலனை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற சற்று சிரமபட வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியையும் அஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.  

வைகாசி

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம், பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆனி

உங்கள் ராசியதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சூரியன் 7-ல், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிவபெருமானையும் அஷ்டலட்சுமியையும் வழிபடவும்.     

ஆடி

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். சிவனை வழிபடுவது உத்தமம்.

ஆவணி

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9, 10-ல் புதன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது வளமான பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் இருந்த பகை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.   

புரட்டாசி

உங்கள் ராசியதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்கள் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.  

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இருக்கும். சிறப்பான பணவரவால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் ஒற்றமை பலப்படும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் சஞ்சரித்தாலும் 6-ல் ராகு, 18-ஆம் தேதி வரை 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிருந்த பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. 

மார்கழி

ஜென்ம ராசியில் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சுக்கிரன், புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் சுமைகள் சற்றே குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.  

தை

ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையிருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.    

மாசி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். சிலருக்கு வெளியூர்களுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். தினமும் விநாயகரை வழிபடவும்.          

பங்குனி

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அதிகபடியான அலைச்சல்கள் இருக்கும். ராகு 6-ல் இருப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் பிரச்சினைகள் ஏற்படகூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவனையும், முருகரையும்  வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9            நிறம் - மஞ்சள், பச்சை    கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்     திசை - வடகிழக்கு           தெய்வம் - தட்சிணா மூர்த்தி

பிலவ வருட பலன்கள் 2021-2022 விருச்சிகம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உங்களது நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் யோகம் உள்ளது. உங்களுக்கு இருந்த கடந்த கால தேக்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் யோகம், புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம், இருக்கும் வீட்டை புதுப்பிக்க முடியும்.

தொழில் ரீதியாக படிப்படியான வளர்ச்சி, தொழிலை விரிவு படுத்தும் யோகம் ஏற்படும். உங்களது தனி திறமையால் பல்வேறு வெற்றிகளை அடையும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படுவதுடன் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு இவ்வண்டு ஆண்டு கோளான குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் சில நேரங்களில் தேவைற்ற சுனக்கங்கள் ஏற்படும். தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.

சர்ப்ப கிரகமான கேது ஜென்ம ராசியில், ராகு 7-ல் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒன்றும் இல்லாத விஷத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

இவ்வாண்டில் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு வரும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு நல்ல அமைப்பு என் கூற முடியாது. குரு 3-ல் சஞ்சரிக்கும் போது தனது 5-ஆம் பார்வையாக 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமணம் சார்ந்த மங்கள நிகழ்வுகள் குடும்பத்தில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அதிக அலைச்சலால் உடல் அசதி, இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்த கால வீண் செலவுகள் குறையும். நீங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் யோகம் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். சுப காரியங்கள் நடைபெற சிறுசிறு இடையூறுகள் ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல்

பொருளாதாரம் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகள் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் வந்து மகிழ்ச்சி ஏற்படும். நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலை பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அலைச்சல் அதிகப்படியாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களிடமும் நிதானமாக செயல்படுவது சிறப்பு.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் நன்றாக இருந்து பட்ட பாட்டிற்கான பலனைப் பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலையை அடைய முடியும். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் ஓரளவுக்கு தடையின்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் நல்ல விளம்பரம் கிட்டும். படபிடிப்புகளுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றி மறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய பெறுவதில் தடைகள் ஏற்படும். பண வரவுகள் சுமராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சற்று விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

படிப்பு

கல்வியில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல நிலையை அடைய முடியும். நல்ல மதிப்பெண்களை பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வைகாசி

உங்கள் ராசிக்கு சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் சூரியன், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை உடனிருப்பவர்களையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் வென்று விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் மருத்துவ செலவுகளுக்குப் பின் உடனே சரியாகி விடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சிவனை வழிபடுவது உத்தமம்.

ஆனி

உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், உடல் அசதி போன்றவை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். விநாயகரையும், சிவனையும் வழிபாடு செய்வது உத்தமம்.

ஆடி

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன், 4-ஆம் தேதி முதல் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது  நல்லது. விஷ்ணுவை வழிபடவும்.       

ஆவணி

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 10, 11-ல் செவ்வாய், புதன் இம்மாதத்தில் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

புரட்டாசி

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.   

ஐப்பசி    

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால நெருக்கடிகள் குறையும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ வழிபாடு தொடர்ந்து செய்வது நல்லது.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவனையும் முருகரையும் வழிபடுவது உத்தமம். 

மார்கழி

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சனி 3-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்துவிட முடியும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். முருகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது உத்தமம்.   

தை

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

மாசி

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாத முற்பாதியில் 2-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது உத்தமம்.   

பங்குனி

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கம். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவால் சொந்த பூமி, மனை யாவும் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை அ¬ம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,      கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,         திசை - தெற்கு        தெய்வம் - முருகன்