Tuesday, September 28, 2021

Today rasi palan - 29.09.2021

 

Today rasi palan - 29.09.2021

இன்றைய ராசிப்பலன் -  29.09.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-09-2021, புரட்டாசி 13, புதன்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.30 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.25 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

 

 ராகு

சந்தி

 

திருக்கணித கிரக நிலை

29.09.2021

 

குரு (வ)

சனி (வ)

 

 

கேது

புதன்(வ) சுக்கி

சூரிய செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  29.09.2021

மேஷம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

சிம்மம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கடன் கொடுப்பதோ வாங்குவதோ தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன்கள் குறையும்.

மகரம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

Monday, September 27, 2021

Today rasi palan - 28.09.2021

 

Today rasi palan - 28.09.2021

இன்றைய ராசிப்பலன் -  28.09.2021

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-09-2021, புரட்டாசி 12, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 08.44 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் இரவு 08.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 

 

 சந்தி ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

28.09.2021

 

குரு (வ)

சனி (வ)

 

 

கேது

புதன்(வ) சுக்கி

சூரிய செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  28.09.2021

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

தனுசு

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மகரம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். செய்யும் செயல்களில் நிதானம் தேவை. உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும்.