Monday, December 29, 2025

Today rasi palan - 29.12.2025

 


Today rasi palan -
29.12.2025

இன்றைய ராசிப்பலன் -  29.12.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-12-2025, மார்கழி 14, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 10.13 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் காலை 07.41 வரை பின்பு அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 06.04 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

சனி சந்தி

 

 

குரு (வ)

 

ராகு

 

29.12.2025

 

 

கேது

சூரிய செவ் சுக்கி

புதன்

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் - 29.12.2025

மேஷம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபங்கள் உண்டாகும். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கன்னி

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் அதிகாரிகளிடம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.

மீனம்

இன்று உடல் நிலையில் சோர்வு மந்த நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்கள் பாதியில் தடைப்படலாம். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

Sunday, December 28, 2025

Today rasi palan - 28.12.2025

 


Today rasi palan -
28.12.2025

இன்றைய ராசிப்பலன் -  28.12.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-12-2025, மார்கழி 13, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.00 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.43 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சனி சந்தி

 

 

குரு (வ)

 

ராகு

 

28.12.2025

 

 

கேது

சூரிய செவ் சுக்கி

புதன்

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  28.12.2025

மேஷம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

கடகம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சு வார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

கன்னி

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில்  வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.