Thursday, January 2, 2020

Today rasi palan - 03.01.2020



Today rasi palan - 03.01.2020
இன்றைய ராசிப்பலன் -  03.01.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
03-01-2020, மார்கழி 18, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 11.27 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 07.20 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் 1/2- . அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சந்தி


ராகு

திருக்கணித கிரக நிலை
03.01.2020

  சுக்கி

சனி குரு சூரிய கேது புதன்
செவ்
 


இன்றைய ராசிப்பலன் -  03.01.2020
மேஷம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாளாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.
சிம்மம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்று ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்புடன் முடிப்பார்கள்.
துலாம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் முடிந்து மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
தனுசு
இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

Vaara Rasi Palan (05-01-2020 to 11-01-2020) | Weekly Astrosign Predictio...

Vaara Rasi Palan (05-01-2020 to 11-01-2020) | Weekly Astrosign Predictio...

Wednesday, January 1, 2020

Today rasi palan - 02.01.2020



Today rasi palan - 02.01.2020
இன்றைய ராசிப்பலன் -  02.01.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
02-01-2020, மார்கழி 17, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 09.00 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி


ராகு

திருக்கணித கிரக நிலை
02.01.2020

  சுக்கி

சனி குரு சூரிய கேது புதன்
செவ்
 


இன்றைய ராசிப்பலன் -  02.01.2020
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
கன்னி
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
துலாம்
இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மகரம்
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மீனம்
இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.