Saturday, December 2, 2023

Today rasi palan - 03.12.2023

 


Today rasi palan - 03.12.2023

இன்றைய ராசிப்பலன் -  03.12.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

03-12-2023, கார்த்திகை 17, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 07.27 வரை பின்பு தேய்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.36 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 09.36 வரை பின்பு மரணயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

ராகு

  குரு (வ)

 

 

சனி

 

03.12.2023

சந்தி

 

 

புதன்

சூரிய செவ்

  சுக்கி

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  03.12.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.

கன்னி

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் சிக்கல்கள் குறையும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய திட்டங்கள் நினைத்தபடி நிறைவேறும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

Friday, December 1, 2023

Live chat December 1 | 501 th live | Q&A | Astrology | Dr.Murugubalamuru...

Today rasi palan - 02.12.2023

 


Today rasi palan - 02.12.2023

இன்றைய ராசிப்பலன் -  02.12.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-12-2023, கார்த்திகை 16, சனிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.14 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் மாலை 06.54 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் மாலை 06.54 வரை பின்பு மரணயோகம்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

ராகு

  குரு (வ)

 

 

சனி

 

02.12.2023

சந்தி

 

 

புதன்

சூரிய செவ்

  சுக்கி

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  02.12.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கடகம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் பெறுவீர்.

துலாம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.