Pages

Sunday, February 13, 2022

Today rasi palan - 14.02.2022

 



Today rasi palan - 14.02.2022

இன்றைய ராசிப்பலன் -  14.02.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

14-02-2022, மாசி 02, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 08.28 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 11.52 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பகல் 11.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 

 

 ராகு

 

சூரிய குரு

திருக்கணித கிரக நிலை

14.02.2022

சந்தி

சனி புதன்

 

சுக்கி செவ்

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  14.02.2022

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். செய்யும் வேலைகளில் ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

கடகம்

இன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிட்டும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment