Pages

Wednesday, June 22, 2022

Today rasi palan - 23.06.2022

 


Today rasi palan - 23.06.2022

இன்றைய ராசிப்பலன் -  23.06.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

23-06-2022, ஆனி 09, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 09.42 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ரேவதி நட்சத்திரம் காலை 06.14 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 06.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

குரு சந்தி செவ்

ராகு

புதன் சுக்கி

சூரிய

 

சனி (வ)

 

23.06.2022

 

 

 

 

 

கேது

 

 

இன்றைய ராசிப்பலன் -  23.06.2022

மேஷம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.

ரிஷபம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று காலதாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி

இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

துலாம்

இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றமான நிலை ஏற்படும்.

விருச்சிகம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொது காரியங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகமாகும்.

தனுசு

இன்று வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பர்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

No comments:

Post a Comment