Pages

Monday, May 29, 2023

Today rasi palan - 30.05.2023

 


Today rasi palan - 30.05.2023

இன்றைய ராசிப்பலன் -  30.05.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-05-2023, வைகாசி 16, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பகல் 01.08 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 

ராகு புதன் குரு

சூரிய

சுக்கி

சனி

 

30.05.2023

செவ்

 

 

 

 

கேது

  சந்தி

 

இன்றைய ராசிப்பலன் -  30.05.2023

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் புதிய மாற்றங்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு  கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தினரால் நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் அனுகூலங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

மீனம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

No comments:

Post a Comment