Pages

Tuesday, August 8, 2023

Today rasi palan - 09.08.2023

 


Today rasi palan - 09.08.2023

இன்றைய ராசிப்பலன் -  09.08.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

09-08-2023, ஆடி 24, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 04.11 வரை பின்பு தேய்பிறை தசமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 02.29 வரை பின்பு சித்தயோகம். ஆடி கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

குரு சந்தி ராகு

 

 

  

சனி (வ)

 

09.08.2023

சூரிய சுக்கி (வ)

 

செவ் புதன்

 

 

  கேது

 

இன்றைய ராசிப்பலன் -  09.08.2023

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தில் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.

கடகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வங்கி சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப்பலன் உண்டாகும்.

 

No comments:

Post a Comment