Pages

Tuesday, September 12, 2023

Today rasi palan - 13.09.2023

 


Today rasi palan - 13.09.2023

இன்றைய ராசிப்பலன் -  13.09.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-09-2023, ஆவணி 27, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.49 வரை பின்பு அமாவாசை. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.01 வரை பின்பு பூரம். சித்தயோகம் பின்இரவு 02.01 வரை பின்பு அமிர்தயோகம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

ராகு குரு (வ)

 

 

  

சனி (வ)

 

13.09.2023

சுக்கி

 

சூரிய சந்தி புதன் (வ)

 

 

  கேது

செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  13.09.2023

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று திருமண சுபமுயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியான பயணங்களில் வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

தனுசு

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.

கும்பம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.

No comments:

Post a Comment