Pages

Wednesday, December 13, 2023

Today rasi palan - 14.12.2023

 


Today rasi palan - 14.12.2023

இன்றைய ராசிப்பலன் -  14.12.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

14-12-2023, கார்த்திகை 28, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 12.56 வரை பின்பு வளர்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் காலை 09.47 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

ராகு

  குரு (வ)

 

 

சனி

 

14.12.2023

 

 

 

புதன் (வ)

சந்தி

சூரிய செவ்

 சுக்கி

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  14.12.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கப்பெறும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகள் செய்யும் வாய்ப்பு அமையும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணி சுமையால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

தனுசு

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். வேயை£ட்களின் ஆதரவு இருக்கும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் பெயர், புகழ் மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வங்கி மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

No comments:

Post a Comment