Pages

Tuesday, June 11, 2024

Today rasi palan - 12.06.2024

 


Today rasi palan - 12.06.2024

இன்றைய ராசிப்பலன் -  12.06.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

12-06-2024, வைகாசி 30, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 07.17 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.12 வரை பின்பு பூரம். சித்தயோகம் பின்இரவு 02.12 வரை பின்பு அமிர்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

  ராகு

 செவ்

சூரிய சுக்கி குரு புதன்

 

சனி

 

12.06.2024

 

 

சந்தி

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  12.06.2024

மேஷம்

இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.

தனுசு

இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  தொழில் வியாபாரத்தில் புது புது மாற்றங்களால் நற்பலன்கள் கிட்டும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

கும்பம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

No comments:

Post a Comment