Pages

Friday, August 16, 2024

Today rasi palan - 17.08.2024

 


Today rasi palan - 17.08.2024

இன்றைய ராசிப்பலன் -  17.08.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-08-2024, ஆவணி 01, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 08.06 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 05.51 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூராடம் நட்சத்திரம் பகல் 11.49 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். சனிப்பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

 ராகு

 

செவ் குரு

 

 

சனி (வ)

 

17.08.2024

 

 

சூரிய சுக்கி புதன் (வ)

சந்தி

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  17.08.2024

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மாலை 05.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு மாலை 05.28 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபம் அடையலாம்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய வாய்ப்புகளால் வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பதால் லாபம் அடைவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

No comments:

Post a Comment