Pages

Thursday, September 5, 2024

Today rasi palan - 06.09.2024

 


Today rasi palan - 06.09.2024

இன்றைய ராசிப்பலன் -  06.09.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-09-2024, ஆவணி 21, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி பகல் 03.07 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.25 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் காலை 09.25 வரை பின்பு சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 

 

 ராகு

 

குரு

செவ்

சனி (வ)

 

06.09.2024

 

 

சூரிய புதன்

 

 

 

சந்தி சுக்கி கேது

 

இன்றைய ராசிப்பலன் -  06.09.2024

மேஷம்

இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம். வாகன பழுது பார்ப்பதற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.

துலாம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் சிலருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும்.

No comments:

Post a Comment