Pages

Thursday, October 24, 2024

Today rasi palan - 24.10.2024


Today rasi palan - 24.10.2024

இன்றைய ராசிப்பலன் -  24.10.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

24-10-2024, ஐப்பசி 07, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.58 வரை பின்பு தேய்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.15 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் காலை 06.15 வரை பின்பு சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 ராகு

 

குரு (வ)

 

சனி (வ)

 

24.10.2024

சந்தி செவ்

 

 

 

சுக்கி

 சூரிய புதன்

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  24.10.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் மூலம் மனசங்கடங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.

கடகம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தடைபட்ட வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும். வெளியூரில் இருந்து நற்செய்தி கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை மன தைரியத்தோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

கன்னி

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

தனுசு

இன்று புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் இடையூறு ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

மகரம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிட்டும்.


No comments:

Post a Comment