Pages

Tuesday, October 29, 2024

Today rasi palan - 29.10.2024

 


Today rasi palan -
29.10.2024

இன்றைய ராசிப்பலன் -  29.10.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-10-2024, ஐப்பசி 12, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 10.32 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திரம் நட்சத்திரம் மாலை 06.34 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் மாலை 06.34 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 ராகு

 

குரு (வ)

 

சனி (வ)

 

29.10.2024

செவ்

 

 

 

சுக்கி

 சூரிய புதன்

சந்தி கேது

 

இன்றைய ராசிப்பலன் -  29.10.2024

மேஷம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். தடைபட்ட சுபகாரியம் கைகூடி மன நிம்மதி ஏற்படும்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம்.

கன்னி

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

தனுசு

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

No comments:

Post a Comment