Pages

Saturday, February 1, 2025

Today rasi palan - 02.02.2025

 


Today rasi palan -
02.02.2025

இன்றைய ராசிப்பலன் -  02.02.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-02-2025, தை 20, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 09.15 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 12.52 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். வசந்த பஞ்சமி. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 சந்தி சுக்கி ராகு

 

குரு (வ)

செவ் (வ)

சனி

 

02.02.2025

 

சூரிய புதன்

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் - 02.02.2025

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்குவதில் அனுகூலம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

மிதுனம்

இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். தூர பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.

கன்னி

இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டிருந்த வேலைகள் இன்று எளிதில் முடிவடையும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.

தனுசு

இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையலாம்.

மகரம்

இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

No comments:

Post a Comment