Pages

Tuesday, March 4, 2025

Today rasi palan - 05.03.2025

 


Today rasi palan -
05.03.2025

இன்றைய ராசிப்பலன் -  05.03.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-03-2025, மாசி 21, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 12.51 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 01.08 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி - கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 ராகு புதன் சுக்கி(வ)

சந்தி

குரு

செவ்

சூரிய சனி

 

05.03.2025

 

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  05.03.2025

மேஷம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் உதவியுடன் சுமூகமாக முடியும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.

மிதுனம்

இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

கடகம்

இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். அசையா சொத்துக்களால் அனுகூலம் உணடாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு காலை 08.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மதியத்திற்கு பிறகு விலகி அனுகூலம் ஏற்படும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

துலாம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு காலை 08.13 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

தனுசு

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாகவே இருக்கும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

No comments:

Post a Comment