Pages

Saturday, March 8, 2025

Today rasi palan - 09.03.2025

 


Today rasi palan -
09.03.2025

இன்றைய ராசிப்பலன் -  09.03.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

09-03-2025, மாசி 25, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி காலை 07.45 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 11.55 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 ராகு புதன் சுக்கி(வ)

 

குரு

சந்தி செவ்

சூரிய சனி

 

09.03.2025

 

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  09.03.2025

மேஷம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.

கடகம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

சிம்மம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

கன்னி

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் மாலை வேலையில் நற்பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.46 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும்.

மகரம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப்பலன் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் நல்ல தொடர்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment