Pages

Sunday, March 30, 2025

Today rasi palan - 31.03.2025

 


Today rasi palan -
31.03.2025

இன்றைய ராசிப்பலன் -  31.03.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-03-2025, பங்குனி 17, திங்கட்கிழமை, துதியை திதி காலை 09.11 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.42 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 01.45 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 சூரிய ராகு புதன்(வ) சுக்கி(வ) சனி

சந்தி

குரு

செவ்

 

 

31.03.2025

 

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  31.03.2025

மேஷம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். எதிலும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.

கும்பம்

இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

No comments:

Post a Comment